பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கம்பன் கலை நிலை

குலமகளை அாக்கன் கொன்றாெழித்தானே? தின்றழித்தானே?

என்று தெருமந்து நொந்தான். அருணன் உதிக்கும் சமயம் ஆயது நகர் அயல்ே ஒரு குளிர்பூஞ்சோலையைக் கண்டான். அங்கேனும் அமையாதா ? என்று ஆவலோடு பாய்ந்தான். அங்க அசோகவனத்தில் சிதையைக் கண்டான். சிக்கை களித்தான். வெயிலிடைவைத்த விளக்கென ஒளியிழந்து உருக்குலைந்துள்ள அப் பதிவிாதையின் பரிபவ நிலையை நோக்கிப் பரிதாப முற்றான். பின்பு கண்ணெதிரே போய் கின்று இராம தாதன் எனக் கான் வந்துள்ள உண்மையை உரைத்து அடையாளமாகக் கணையாழி யைக் கையில் கொடுத்தான். அதனேக் கண்டவுடனே அக் கற்பாசி கழி பேருவகைகொண்டு இராமனேக் கண்டதுபோலவே உளமிகவுருகி அளவிலா ஆனந்தமடைந்தாள். நாயகன் விரைந்து வந்து தன்னைச் சிறை மீட்டியருளும்படி உரை பல கூறித் தனது அடையாளமாகச் சூடாமணியை அனுமானிடம் கொடுத்து விடுத்தாள். அவன் தொழுது வாங்கி விடைபெற்றெழுந்து வெளியே வந்து பொழிலை யழித்து அசக்கர் பலரைக்கொன்று அமாாற்றி அடல் புரிந்தான். இந்திரசித்து வெகுண்டு வந்து நாகபாசத்தால் இவனைப் பிணித்துக்கொண்டு போய் இராவணன் முன் விட்டான். அவன் சிக்கை கொதித்துச் சிறிப்பார்த்து நீ யார் ? என ஆர்த்தான். இவன் யாரும் வியப்ப மாறுபல உாைத்து வீறுடன் கின்றான். வாலைச்சுட்டு ஊரைச்சுற்றி இவனே அவமானப்படுத்தி விடுக ‘ என அவன் ஆணே கொடுத் தான். அவ்வாறே அாக்கர் பலர் அடர்ந்து பிடித்து அனுமான் வாலில் தீயை வைத்து விட்டார். தன் வாலில் வைத்த தீயை விடுகளில் வைத்து அவ்வூரைச் சுட்டெரித்துவிட்டுக் கடலைத் தாண்டிமீண்டு வந்து மகேந்திர மலையை யடைந்து அங்கே தனது வாவை எதிர்பார்த்திருந்த வானாங்களைக்கண்டு சானகி நிலையை அவன் சால்புடன் உாைத்தான். அனைவரும் கேட்டு ஆனந்த மடைந்தார். அதன் பின் அனுமான்.அவருடன் விரைந்து வந்து இராமரையடைந்து, கான் சீதையைக்கண்டுவங்க கிலையைத் தெளி வாக உாைத்தான். அவ் வள்ளல் உள்ளம் களித்து உவகை மீக் கூர்ந்தார். இலக்குவன் சுக்கிரீவன்முதலிய எல்லாரும் இன்பமீ துார்ந்தார். உடனே இலங்கை மேல் படையெழுச்சி செய்தார். எழுபது வெள்ளம் வானாங்களும் கென் திசை நோக்கி நடக்