பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கம்பன் கலை நிலை

‘’ பேரிகை முழக்கிய பிறங்கும் ஒசையால்

ஆரிட ருழங்துவீழ் அசுண மாவென (விநாயகபுராணம்)

வசைபடு மன்னவன் வாய்மை யாலறை விசிமுழ வொலி செவி வெதும்பக் கேட்டலும் இசைபடு மன்னவற் கிரங்கி ெைரலாம் அசுணமென்புள்ளென அலமங்தேங்கினர்.” (நைடதம்)

குழலிசைகேட் டருகணையும் அசுணம் என

(காஞ்சிப்புராணம்) மறையிற்றன் யாழ்கேட்ட மானை அருளாது அறைகொன்று மற்றதன் ஆருயிர் எஞ்சப் பறையறைங் தாங்கொருவன் நீத்தான் (கலித்தொகை)

பறைபட வாழா அசுணமா (கான்மணிக்கடிகை)

அதனமாவின் இயல்பினைக் குறித்துவந்துள்ள இவற்றால் அதன் நிலைமையும் நீர்மையும் நேரே தெரியலாகும். மேலே வந்துள்ள கவிகளை இனம் கண்டு இடங்கள் தோறும் தொடர்ந்து பொருளறிந்து கொள்க. அவை யாவும் அசுணத்தின் சுவை யுணர்வினை ஒருமுகமாயுனர்க்கியுள்ளமையால் அதன் உயிரியல்பு உணா கின்றது. கம்பர் பாயிரத்தில் கூறியதோடு நாலினுள் ளும் அசுணத்தைப்பற்றி மேலும் சில கூறியிருக்கிறார் அடியில் வருவன காண்க.

கினேந்த போதினும் அமிர்தொக்கும் நேரிழை நிறைதேன் வனங்த வேங்கையில் கோங்கினில் வயின்றாெறும் தொடுத்துக் குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்தவின் குறிஞ்சிக் கனிந்த பாடல்கேட்டு அசுணமா வருவன காணுய் !

(சித்திர கூடம் 24)

இது சீதையிடம் இராமர் சிக்கிா கூட மலை வளத்தைக் காட்டி வரும்பொழுது கூறியது. நேரிழை! என்று வாய் குளிர நேரே அழைத்து அங்குள்ள கிகழ்ச்சிகளைத் தமது அருமை மனைவிக்கு இவர் உரிமையுடன் விளக்கியிருக்கும் இக்காட்சியை இக்காலக் தில் குற்றாலம் கொடைக்கானல் நீலகிரிகளில் கோடைக்கு ஒதுங்கிக் குளிர் நுகர்த்துவரும் காகலர் காகலிகளிடம் ஆதிய வோடு போதனை கனிந்து எதாவது காணமுடியுமா காணுக இன்ப நலங்களை யெல்லாம் அன்பு கலங்கனியக் கம்பன்டக:வடகிலே யிலே கண்டு மகிழ்கின்றாேம்.