பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கம்பன் கலை நிலை

புலனுகர்வில் வெறிகொண்டு விாைங் கலைந்து விழுந்துழல் கின்ற அதன் இயல்பினை விளக்கியபடி யிது. ஆசு புரிதலும், அலம் புரிதலும் பொறியின் இயல்பாகலான் அதற்கு அவை அடை யாக வந்தன. ஆசு வேகத்தையும், அலம் அலைவையும் குறிக்கும். பூக்கொறும் அவாவியோடும் பொறிவரி வண்டு போலப் புலன் தோறும் அவாவி அலையும் பொறியின் இயல்பை இவ்வாறு புலப் படுத்தினர்.

பொறியை வாளி ஆக உருவகஞ் செய்தது அதன் கடுமை யும், கொடுமையும் கருதி.

ஐம்புல வேடர் ‘ (சிவஞான போதம்), ஐவரென்ற பு ைது வேடர் ‘ (தாயுமானவர்) எனவும், வருவன காண்க. வழிப்பறி பறிக்கும் கள்ளர் ப்ோல, உள்ள உணர்வுகளைக் கொள்ளை கொண்டு போதலால் புலன்கள் வேடர் என கின்றன. உயிர்கள் அறக் காறு செல்லுங்கால் இடையே ஆறலைக்குங் கள்வர் போல் கோலைத்துச் சிாழிக்கும் பொல்லாப் புலக்கொடுமையின் கிலை எல்லார்கும் புலப்படப் புலவேடர் என்றார். உயிர்க்கு நலம் நாடுவார் இப்புலவேடர் வசப்படாமல் புகழ் அறங்களோடு கிலவி கிம்பர்; பட்டார் எல்லாம் கெட்டு இழிந்து போவர் என்க.

“ அறிவினுல் பெரிய நீரார் அருவினை கழிய கின்ற நெறியினேக் குறுகி இன்ப நிறைகடல் அகத்து கின்றாம்: பொறி யெனும் பெயர ஐவாய்ப் பொங்கழல் அரவின் கண்ணே வெறிபுலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் கின்றாம்.

(7. வக சிங்கா ாகனி).

- —"---

இக்கவியை வெளியே கேட்கும்படி வாய்விட்டுத் தெளிவாகப் பாடிவருக. பொருளைக் கருத்துான்றி நோக்கிப் புலக்கொடுமையை ஒர்ந்து போகம் பெறுக. புலநிலையில் புலையாடாமல் உமது உயிர் நிலை இதுபொழுது எங்கிலையில் உள்ளது என்பதை இக்கவிக் கருத்தோடு ஒத்துவைத்து உய்த்துணர்ந்து கொள்க.

அறிவுடையார் நெறியே கடந்து நிறைககம் பெஅவர் அறி விலிகள் கெறிகடந்துபோய் நெடுந்துயர் அடைவர் என உணர்த்தி கிற்கும் இதனை உள்ளங்கொண்டு உறுதிகண்டு நெறி கவருமல் உயர்கலம் பேணி நாளும் ஒழுகிவரவேண்டும்.