பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

முகவுரை


நியாசங்கள் செய்துவருங்கால் அவைகள் தோறும் அறிஞர்கள் வியந்து பாராட்டிச் “சுவைசுரந்துள்ளது” என உள்ளுற உவந்து என்னை ஊக்கி வந்த உறுதிப்பாடுகளுமேயாம். ஆயினும் பேச்சில் காட்டி வந்த சுவைப்பண்புகளை எழுத்தில் காட்ட முடியுமா? என்று இன்னும் ஐயுறவு என்னுளத்தில் எழுந்து விழுகின்றது. தெய்வத் திருவருள் கூட்டிய அளவு செய்யப் பெறுவோம்.

சுவைமயமான இந்நூலை உரிமையுடன் கண்டு உலகம் உவந்து கொள்ளும் என உறுதியாக நான் நம்பியிருக்கிறேன்.

செந்தமிழ் நலம் சுரந்து அந்தமில் இன்புடன் வந்துள்ள இந்த அருமை நூலை எல்லாரும் இனிது பயின்று இன்புற வேண்டும் என்று எம் செந்திற்பெருமான் திருவருளைச் சிந்தித்து வந்தித்து வாழ்த்துகின்றேன்.

கம்பர் கலைச்சுவையைக் காசினியில் எல்லாரும்
உம்பர் அமிர்தா உவந்துண்ண - இம்பர்
இனிதருளி என்னுள் இருந்தருளுங் தெய்வம்
தனியருளி நிற்கும் தழைத்து.

திருவள்ளுவர் நிலையம்,
இங்ஙனம்
மதுரை
ஜெகவீரபாண்டியன்.
1-4-41


சிறப்புப்பாயிரம்

கம்பனுயர் கலைநிலையைக் கற்றவரும் மற்றவரும்
கனிந்து கேட்கச்
செம்பவள வாய்திறந்து தெள்ளமிர்த மெனப்பொழிந்து
சீர்த்தி பெற்றான்
இம்பரெல்லாம் இன்பமுற இன்றெழுதி வெளியீந்தான்
எழில்வேற் செவ்வேள்
பைம்பொனடி முடிபுனைந்த செகவீர பாண்டியனாம்
பண்பார் வேந்தே.