பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கம்பன் கலை நிலை

கேட்கலம் என்னும் பெயரில்அமைந்துள்ள ஒசைக்கு இசைய எதுகை எடுத்து இக்கவி தொடுத்திருத்தலை உய்த்துணர்ந்து கொள்க. கிரிபு என்னும் சொல்லணியும், உருவகம் என்னும்

பொருளணியும் இதில் மருவியுள்ளன.

விலை வரம்பில்லா மணிமாலைகள் புரளும் முலையவர் என்ற தல்ை அவர்கம் திருவும் அழகும் உருவும் பிறவும் உனாலாகும். இன்பச் சுவை ததும்ப, அன்பு கலம் கனிய, அழகொளி தவழ, திருவும் தேசும் திகழ, அறிவும் ஆசையும் பெருகக் காசலம்பு கொங்கையர் எனக் கோசல தேசத்து மங்கையரை இதில் குறித் திருக்கும் நிலையைக் கூர்ந்து பார்க்க.

நெறி=வழி. நீதிநெறி, நன்னெறி என்க. வடநாலார் இதனைச் சன்மார்க்கம் என்பர். ஒர் ஊருக்கு அமைந்துள்ள நேர்வழி போல இன்ப நிலையமான முத்தி நகருக்கு அறநெறி வாய்ந்துள்ளது. ஆதலால் அங்செறியே செல்வோர் இறுதியில் முடிவிலின் பத்தை அடைவர்; நெறி விலகிப் புறம்போனுல் அறம் புகழ்கள் இழந்து அவமே திரிந்து அல்லலுறுவர் என்க.

ஆண் பெண் இருபாலாரும் ஐம்பொறிகளை நெறிவழுவாமல் நேர் வழியில் செலுக்தி ஒரு தேசத்தில் ஒழுகி வருவார்கள் ஆயின் அக்தேசம் எவ்வளவு சீர்மை யுடையதாய்ச் சிறந்து திகழும்! அத்தகைய உத்தமர்களேயுடைய புத்தொளி நாடு எ க் காலத்திலேனும், யாண்டாவது, இருந்ததுண்டா ? இருக்க முடி யுமா? அல்லது அப்படி இருக்க வேண்டும் என்று கம்பர் கற்பனே செய்திருக்கிரு ரா? என இவ்வாறெல்லாம் கருதி ஆராயுமாறு இக்கவியின் பொருள் அற்புத கிலேயில் அமைந்திருக்கின்றது.

ஒரு கில மண்டலம் முழுவதும் இவ்வளவு சீர்மையும் மையுமுடைய குலமக்கள் கிலைபெற்றுத் தலைமையுடன் வாழ்ந்து வந்தார் என்றால் அவ்வாழ்க்கை கிலை எவ்வளவு அதிசய முடை

யது ? அவர் எத்துனே உயர் கிலையினர் உய்த்துணர்க.

இந்நாளில் எங் நாட்டிலும் நம் அனுபவத்தில் கண்டுள்ள மக்கள் நிலைமைக்கும், கம்பர் காட்டும் கோசலக் காட்சிக்கும்

உள்ள வாசியை உள்ளத்துள் ஊன்றி நோக்கவேண்டும்.