பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 கம்பன் கலை நிலை

r

கவிக்கூற்று. இங்கே ஆறு என்றது சாயு நதியை. கில நலம் கூற வந்தவர் அதற்கு மூலமாயுள்ள நீர்வளம் கூற நேர்த்தார்.

அணி என்ற கல்ை அங்கதிகிலை, நீர்ப்பெருக்கு, பலன், நலன் முதலிய அழகியல்புகளெல்லாம் மொழியவரும் என்பது அறிய கின்றது. -

சாயு நதி.

  • -m

சாயு என்பது இமயமலையிலுள்ள மானச_காசின் தொடர் பாய் வருகின்றது. அதனல் அது சரயுகதி எனப் பேர் பெற்று வந்தது. கிறைந்த நீர்ப்பெருக்குடையது. அது மேல் திசையி லிருந்து நேரே வந்து, அயோத்தி நகருக்கு அருகே வடபுறமாய் வளைந்து, கிழக்குமுகமாய்ப் படர்ந்து, அதன் பின் தென்திசை நோக்கித் திரும்பி, பின்பு தென் கீழ்த் திசையில் போய்க் கங்கை யோடு கலந்து போகின்றது. அச் சங்கமத் துறை அக்காலத்தில் மிகவும் புண்ணிய கிலையமா எண்ணப்பட்டிருந்தது. அங் நதி என்றும் குறையாக நீர்வளமுடையதாய் நிலவியிருந்தமையால் சீவாதி என யாவாாலும் புகழ்ந்து பாராட்டப்பெற்றது. அதற்கு இராமகங்கை என்று ஒரு பெயரும் உண்டு. கோசல நாட்டி ற்கு உயிராதாரமாய் உறவுகொண்டுள்ளமையால் கம்பர் உரிமை கொண்டு முதலில் அங்கதி நலனைப் பாட நேர்ந்தார்.

கடவுள் வாழ்த்துப்போல் வான் சிறப்புக் கூறலும் மங்கல வழக்கான ஊல்மாடாதலால் அவ் வான் வழி வந்த நீர்ச்சிறப்பு இக் காவியத்துக்கு வாய்ப்புற வந்தது. இந்த ஆற்றுப் படலத் தில் முதலிலுள்ள கவிதான் முன்னர்க் குறித்தது. இன்னும் சில காண்போம். வெண்ணிற றுேபுனைந்த சிவபெருமான்போல் மேகங்கள்விண்ணில்படர்ந்துபோய் எண்ணிலடங்காக் கடல்நீரை மொண்டு திருமால் எனக் கருமை எய்தி மீண்டு பெருவானம் எழுந்து பாருல கின்புற மேருமலைமேல் மழைபெய்தது என அயல் இரு கவிகளில் உரைத்து அப்பெயலின் காட்சியை ஒர் உவமையோடு பொருத்தி அடுத்து உணர்த்துகின்றார்,

மழை பெய்த மாட்சி. புள்ளி மால்வரை பொன்னெனல் நோக்கிவான் வெள்ளி விழிடை வீழ்த்தெனத் தாரைகள் உள்ளி யுள்ளவெல் லாமுவங் தீயுமவ் வள்ளி யோரின் வழங்கின மேகமே. (ஆற்றுப்படலம் 4)