பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. நதி நிலை 97

இமய மலைமேல் மேகம் நீரைச் சொரிந்த நிலையை வருணித்த படியிது. ள்ளி என்பது இமயமலைக்குப் பெயர். பி மேருவும் புள்ளியும் விளம்புவர் அதற்கே’’ என்றது (பிங்கலங்தை). இப் பேருண்மை தெரியாமல் புள்ளி என்னும் சொல்லுக்கு வேறு வேறு பொருள் கூறினரும் உளர். காாை=நீரொழுக்கு. மேலிருந்து இடையருது ஒழுகுகின்ற வெண்ணிறமுடைய நீர்ச் சொரிவுகள் வெள்ளிக் கம்பிகள்போல் இருந்தன என்பதாம். விழ் = விழுது. ஆலமரத்தின் கிளைகளிலிருந்து வளர்ந்து நேரே கிலம்பாய்ந்து ஊன்றி கிற்கின்ற கொடிகளை வீழ் எனவும் விழுது எனவும் வழங்கி வருதல் காண்க. கீழ்நோக்கி விழ்வது என்னும் எதுவான் வீழ் என்னும் பெயர் விளைந்து வந்தது. நல்ல நீர் வெள்ளே நிறமுடையதாய் நேரே கொடிகள் போல் நீண்டு கிலம் தோய்ந்து கின்றமையால் வெள்ளி வீழ் என்றார். பொன்னும் வெள்ளியும் உலோக வகையில் நெருங்கிய சம்பந்தம் உடையன ஆதலால் அந்த இன முறையில் இரண்டும் ஒன்றாய் மருவிகிற்கும் படி வானம் உரிமைசெய்து வைத்தது என்பார், ‘ வரை பொன் எனல் நோக்கி, வான் வெள்ளி வீழ் விழ்த்திய தென்றார். பொன் னிற முள்ள இமயமலைமேல் வெள்ளிய நீர்த்தாரைகள் வீழ்ந்த தோற்றம் பொற்றகட்டில் வெள்ளிக் கம்பிகளை நீளமாக நாட்டி வைத்தது போல் கிலவி கின்ற தென்பதாம். தாரையின் உருவக் காட்சியும், கவியின் உள்ளக் காட்சியும் இதில் ஒருங்கே மருவி யுள்ளன. இமயம் அருகே கின்று பெயல் இயல் கண்டபடி இது.

மேகம், வள்ளியோரின் காரைகள் வழங்கின என்று கூட்டிக்

காண்க. கைம்மாறு கருதாமல், உள்ளதை ஒளியாமல் எல்லாவற் றையும் ஒருங்கே கொடுக்கும் இயல்பு நோக்கி வள்ளல்கள் இங்கே உள்ள கின்றார். வழங்கல் = அள்ளி வீசுதல்.

மேகம் போல் கொடுத்தான் என எங்கும் முன் மாதிரியாய் உவமை கிலையில் உயர்ந்து வருகின்ற அது, இங்கே அங்கிலை குறைந்து உவமிக்க கின்றது.

மழை பெய்தல் இயற்கை நிகழ்ச்சி, உள்ளி உதவும் உயி ருணர்ச்சி அதற்கு இல்லை; ஆதலின் அவ்வுணர்ச்சியுடைய வள்ளி யோரின் உயர்ச்சியைக் கவி இங்கனம் உய்த்துனா வைத்தார்.