பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3680 கம்பன் கலை நிலை - வச்சிரதந்தன் என்பவன் பெரிய போர் விரன். அரிய பல ஆற்றல்கள் அமைந்தவன். கால காலஞன குல பாணியையும் எளிதாக எண்ணிக் களி மீறி யுள்ளவன். விழி சினந்து நோக் கின் விண்னும் மண்னும் வெருண்டு கலங்கும்படியான வெங் திறலுடையவன். எட்டுக் கோடி சேனைகளுக்குக் தலைவன். கூற்றுவலுக்கு ஒர் கூற்.அவன் என ஏற்றம் மிகப் பெற்றவன். உருவத்தாலும் உறுதி ஆற்றலாலும் உம்பருலகமும் உள்ளஞ்சி ஒடுங்க இம்பரில் ஏற்றம் மிகுந்துள்ளான்.) -" im # # # * H ■ H ■ جمن تھا. விருபாட்சன் என்பவன் மணிபல்லவம் என்னும் கடலி டைக் தீவுக்குக் கனி அரசன புள்ளவன். படைக்கலப் பயிற்சி யில் உயர்ச்சி மிகவுற்றவன். சென்ற போர்முனைகளில் எல்லாம் வென்றியே கண்டு விறுகொண்டு வந்தவன். பாண்டும் போர் வெறியனப் நேர் எ வரும் இலர் என நெஞ்சம் களித்து நெடிது தருக்கி நிற்பவன். சிறந்த பயிற்சிகளை யுடைய எட்டுக் கோடி படை வீரர்களுக்குக் கனி யுரிமையான தலைமை வாய்ந்தவன். விஞ்சையர் குலமும் அஞ்சி அலமர அடலாண்மை மிஞ்சி உட லாண்மை ஓங்கி விரக் கடல் என அவன் விளங்கி நிற்கின்ருன். இன்னவாறே துன்முகன், தாமிரன், எமகாலன், நாமவே லன்,நாசகரன், பிசிகரன், ரனதான், நீர்மத்தன், நெருப்பத்தன், நேமிதக்கன் போர்மக்கன், பிரகத்தன் முதலிய சேனதிபதிகள் பலர் இலங்கைவேக்கனுடைய எவல்களை எவ்வழியும் ஆவலோடு செய்ய அல்லும் பகலும் வெல்லும் திறலோடு விறு மண்டியுள் ளனர். போர் வெறி யாவரிடமும் ஒர் நெறியா புள்ளது. போராடலே பன்றி வேறு எதையும் விரும்பாக விர சூரர் களாய் யாவரும் மேவி யிருக்கின்றனர். தேவர் உலகம் யாவும் அஞ்சி ஏவல் புரிய இலங்கை ஆட்சி யாண்டும் நீண்டு எவ்வழி யும் அசையாத நிலையில் இசையோடு துலங்கியுள்ளது. - ■ s H 野 سیایی படைகளின் வலிகளையும் படைத் தலைவர்களுடைய நிலைகளை யும் இப்படிச் சுருக்கமாகத் தொகுத்து-உரைத்துப் பின்பு-இராச குடும்பத்தைப் பற்றி விபீடணன் பேச நேர்ந்தான். --- _ _ i. கும்பகருணன் தம்பி முற்பகல் சந்திரர் நால்வரில் தயங்கும் கும்ப மாக்கரிக் கோடிரு கைகளால் கழற்றிச்