பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3689 வன்துணைக் கோளரி இரண்டும் மாறிலாக் குன்றிடை உழுவையங் குழுக்கொண்டு ஈண்டியே.” எனத் திரிசடை கனவில் கண்டகைச் சீதையிடம் இவ்வாறு முன்னம் * உரைத்திருக்கிருள். மகள் மொழிக்க அங்க உழுவை மொழி விபீடணன் வாயுரையால் ஈண்டு வெளி வந்துள்ளது. உழுவை = புலி. ஒரிடத்தில் கூறியதை வேறிடங்களிலும் வலி யுறுத்தி வருவது கவியின் கினேவாற்றலை விளக்கிக் கலையின் கனி வோடு வித்தக வினேகமாய் விரிந்து மிளிர்கிறது." (கோசலைச் சிங்கத்திற்கு அஞ்சனப் புலி அருமைக் துணை யாப் அமைந்துள்ள உரிமையை உவந்து நோக்கிக் கரும விரங் களைக் கருதிக் கொள்ளுகிருேம். பகை இனம் பாழ்பட்டழியும் என்பதைத் தொகையாகச் சுட் டியருளினன்." சிங்கரற்கு அழி முப்புரத்தவர் எனச் சமைந்தார். சிவபெருமான் சிரித்து எளிகே திரிபுரங்களை எரித்து ஒழித் தது போல் அனுமான் அரக்கரை அழித்திருக்கலால் இங்ங்னம் உவமை கூறி உணர்த்தினன்.

உக்கிர விரமான உருத்திர மூர்த்தியே இந்த உருவில் வந்து உனக்கு உறு துணையாய் அமைந்துள்ளது என இராமன் உள் ளம் குளிர இலங்கைத் கம்பி உரைத்திருப்பது ஊன்றி யுனர வுரியது. வினையாண்மைகள் வியந்து பேச வந்தன. திரிபுராந்தகன் என அவன் உயர்ந்துள்ளான். இலங்கா புராந்தகன் என இவன் இயைந்திருக்கிருன். சருவ சங்கார மூர்த்தியான உருத்திரனே இந்த வடிவில் வந்திருக்கிருன்; இனி அரக்கர் குலம் பிழையாது; அழிக்கே போம் எனத் தெளி வுறுத்தினன். அரக்கரை முருக்கிப் போந்தவா கண்டு கான் இங்குப்புகுந்தது. விபீடணன் இராமனிடம் வந்து சேர்ந்ததற்கு மூலமான காரணத்தை இங்ஙனம் தெளிவாக வெளியிட்டுள்ளான். 'கரன் முதலிய பெரிய விரர்களைக் கொன்று, வாலியை வென்று விசய கோதண்ட வீரனுப்த் திசை புகழ நின்ற உனது

  • இந் நூல் பக்கம் 2981, வரி 11 பார்க்க.

462 + -