பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3692 கம்பன் கலை நிலை (தனது எவலே மேற்கொண்டு இலங்கை புகுந்து மீண்டு வக்க அனுமான் அங்கே அரக்கர்களோடு போராடி வென்ற வெற்றி கிலேகளை இராமனிடம் பாதும் சொல்ல வில்லை. தோ தேவியைக் கண்ட காட்சியை மாத்திரம் மாட்சியுடன் கூறி மற்ற வினையாண்மைகளை யெல்லாம் விநயமாய் மறைத்திருக் தான். அந்த மதிமானுடைய அடக்கமும் அமைதியும் அதிசய நீர்மைகளாயப் மருவியுள்ளன. கன் புகழ்ச்சிகளை வெளியே சொல்ல காணி ஒளி செப்திருந்த அவனது விர வெற்றிகளை விபீடணன் இராமனிடம் இன்று நேரே கூறியருளினன். அவ் வுரைகள் இப் பெருமானுடைய உள்ளத்தை உருக்கி உயர்ந்த இன்பங்களே விளைத்தன. மனைவியைப் பிரிந்து இளைத்திருந்த தேகம் அனுமனது மகிமைகளைக் கேட்டதும் திளைத்துப் பூரிக் தது. அவனே அன்புரிமையோடு இன்புற கோக்கினன்: அனுமா! நீ கடல் கடந்து போப் இலங்கையில் செய்துள்ள அடலாண் மைகளை இதுவரையும் நான் அறியாமல் இருந்தமைக்கு வருந்து கிறேன். பகைவனுடைய சேனைத் திரள்களைப் பாதிக்குமேல் கொன்.அறு தொலைத்து, ஊரைத் தீயிட்டு எரித்து, உருத்திரமூர்த்தி போல் விர விளையாடல்களை அங்கே நீ வெற்றியோடு செய்தி ருக்கிருப்! அவ்வாறு செய்தவன் சீதையை மீட்டி வராமல் விட்டு வந்தது என் வில்லின் வேலையை நான் காட்ட வேண்டும் என்று கருதியோ? அல்லது எனது வலி நிலையை உலகம் கான வேண்டும் என்று எண்ணியோ? உனது கருமச் சூழ்ச்சிகள் அதிசய மருமங்களுடையன. உன் காலாலும் வாலாலும் கலக்கி வென்ற இலங்கைமேல் இனி நான் படை எடுத்துப் போய்ச் செய்ய வேண்டிய வேலை என்ன? எழுபது வெள்ளம் வானரங் களும் நானும் தம்பியும் சேர்ந்து பல நாள் வருந்திச் செய்ய வேண்டிய வேலையை நீ தனியே நின்று ஒரு நாள் இரவிலேயே எளிதே செய்து வந்திருக்கிருப்! உனது அருந்திறலாண்மைகளை யார் அளந்து சொல்ல வல்லார்? நினைந்து கினேந்து என் நெஞ்சம் வியந்து மகிழ்கின்றது. என் வீரத்தையும் இராவணன் விரத்தை யும் உன் வீரத்துக்குள் ஒடுக்கி உயர் விரனப் நிற்கின்ற உனக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன்? அடுத்து வருகிற பிரம --- கான் வேண்டுகின்றேன். இன்று அனுமனயுள்ள நீ என்றும்