பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* - 7. இ ராமன் 3693 அயனப் அமர்ந்து அகிலவுலகங்ளையும் படைத்தருளும் அற்புக நிலைமையை நான் கற்பனை செய்து களித்திருக்கிறேன்' என இப்படி இராமன் உழுவ லன்போடு உவந்து மொழிந்தான். அன்பு சுரங்து வங்க இந்த இன்ப மொழிகளைக் கேட்டதும் உள்ளம் காணி எழுந்து கலை வணங்கி இருகைகளையும் குவித்து உடல் குழைந்து கண்ணிர் மல்கி அனுமான் உருகி நின்முன். பருகு காதலோடு இர ாமன் உ ரையாடியதும், மாருதி நிறை நானேடு கெஞ்சுருகி கின்றதும் அன்புகனிந்த இன்பக்காட்டு களாப் ஈண்டு எழில் சுரங்துள்ளன. பாக்கியம் பழுத்தன்ன மயில். சீதையைக் கவி இங்கே இப்படிக் குறித்திருக்கிரு.ர். இராமன் பண்ணியுள்ள புண்ணியங்களெல்லாம் ஒருங்கே திரண்டு பழுத்துச் சிவக்க உருவம் எடுத்துச் சானகி என்னும் பேரோடு ஈண்டு வந்துள்ளது என இங்கனம் இசைத்திருக்கிரு.ர். தான் பண்ணிய புண்ணியத்தின் அளவே ஒருமனிதனு க்கு இன்ப நலங்கள் உளவாகின்றன. சக்கரவர்த்தித் திருமகளுன; இராமனுக்கு எல்லாவகையிலும் அரிய பெரிய இன்ப நிலையமா யிருந்து வருதலால் சீதை அவன் பாக்கியம் பழுத்தமயில் என வங்காள். அத்தகைய இன்ப மனேவியைப் பிரிக்கதனுல் துன்பம் பெருகிக் கோள் மெலிந்திருந்தான். இன்று அனுமனுடைய புகழைக்கேட்கவே அம்மெலிவு நீங்கி மேனி பூரிப் படைந்தது.1 மெலிந்த தோள்கள் வீங்கித் தன் துTதனேப் பார்த்து. இராமன் அனுமனைப் பார்த்துள்ள பார்வையை இது, வார்த்துக் காட்டியுள்ளது. உள்ளம் களித்துள்ள அந்த உவகை கிலேயை அளக் து காட்டியிருக்கும் காட்சியை விழைந்து நோக்கி வியந்து கிற்கிருேம். மெலிவும் பொலிவும் மெய் தெரிய வந்தன. தனது எவலே ஆவலோடு செய்து வருகிற அவனது அதிசய நிலையை அறியவே ஆனந்தம் பொங்கி எழுந்தது. அந்த எழுச்சி யால் உள்ளமும் உயிரும் கிளர்ச்சி அடைந்தன; அதனுல் உடல் வளர்ச்சி அடைந்தது; வாய்மொழி உணர்ச்சியோடு எழுந்தது. சீதையை மீட்டிலாதது என்வில் தொழில் காட்டக் கொல்?