பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3694 கம்பன் கலை நிலை அனுமானே நோக்கி இராமன் இப்படிக் கேட்டிருக்கிருன். இந்தக் கேள்வியில் உரிய கேண்மையும் பெரிய ஆண்மையும் Հ> ՅՈ) T வியுள்ளன. உவகையுரையில் சுவைகள் சுரங்து மிளிர்கின்றன. சீதையைக் கனியே சிறை மீட்டிக் கொண்டுவரத் தக்க ஆற்றல் அனுமானிடம் அமைந்திருக்கிறது; இருந்தும் அவ் வாறு செய்ய வில்லை. உரிய நாயகனே நேரே வந்து பகைவனை வென்று முறையோடு மனைவியை மீட்டவேண்டும் என்னும் மரியாதையை மனதில் வைத்து உரிமையோடு மீண்டு வந்துள் ளான் என அவனது அமைதியையும் ஆண்டகைமையையும் அறிவின் உயர்வையும் வியந்து புகழ்ந்திருக்கிருன். வீர! என்று விளித்தது அவனுடைய விரபராக்கிரமங்களைக் கருதி வந்தது. அயலிடத்தில் கன்னம் தனியே கின்று பல்லா யிரம் அரக்கர்களை ஒல்லையில் வென்று எல்லை கடந்து வந்துள் |ளான் ஆதலால் வீர! என ஆர்வமோடு கூறியருளினன். அதிசய வில்வீரன் என எல்லாவுலகங்களும் துதி செய்து வருகின்ற விர மூர்த்தியான இராமன் வாயால் விர என்னும் பேரை அனுமான் ஈண்டுப் பெற்றிருப்பது வெற்றிப் பரிசாயப் விளங்கி நிற்கிறது. விரப் பெருமாள் விரப் பேறருளினன்." என் வலியும் இராவணன் வலியும் உன்னது ஆக்கின. அனுமானே நோக்கி இராமன் இன்னவாறு உ ரைத்திருப் பது உன்னியுனா வுரியது. கான் இலங்கை சென்று செய்ய வேண்டிய விர வெற்றிகளை முன்னதாகவே மாருதி பெரிதும் முடித்து வந்திருத்தலால் அவனது அருக்திறலாண்மைகள் விய ங்,து பேச வந்தன. வியப்பில் வியனிலைகள் விளைந்தன. இராமன் வலியும், இராவணன் வலியும், அனுமன் வலியுள் அடங்கியுள்ளன என்றது அதிசய வியப்பாயுள்ளது. இராவ னனே வென்று இராமன் வெற்றி விரனப் விளங்குவது எல்லாம் அனுமானது அனுகூலத்தால் அமைந்துள்ளது என இக் கோமகன் உவந்து புகழ்ந்துள்ளான். பாக்கியம் உருக் கொண்டது ஒப்பாய்! இராமனது கல்வினேயே ஒர் உருவமாத் திரண்டு அனுமான் என்னும் பேரோடு வந்துள்ளதுஎன்பதை இந்த வாக்கியம் நன்கு விளக்கி யுள்ளது. உவகை மொழி உள்ளம் உருகி எழுந்தது.)