பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இரா LID ன் 3701 சிவம் பழுத்த இராமலிங்க அடிகள் இராமனே கினேந்து இவ்வாறு துதித்திருக்கிரு.ர். அகில மங்கள குண கனடசொரூபி ஆதலால் இந்தக் கரும மூர்த்தியை யாவரும் பேரன்போடு புகழ்ந்து போற்றி உவந்து கொண்டாடி வருகின்றனர். యI வரும் அன்பு கனிய இன்பம் கனிந்திருக்கும் இனிய நீர் மையாளன் என்பதைக் கருணையங்கடல் என்னும் அருமைத் திருநாமம் உரிமையா யுணர்த்தியுள்ளது. இந்தக் கருணைக்கடல் அந்த உப்புக் கடலை நோக்கி அன்று தவம் கிடந்தது. பூழி சென்றுதன் திரு உருப் பொருங்கவும் பொறைதீர் வாழி வெங்கதிர் மணிமுகம் வருடவும் வளர்ந்தான். தனது அருமைத் திருமேனியில் புழுதிகள் படியவும், சூரிய கிரணங்கள் கோய்ந்து வெயில் முகக்கை வருடவும் கடலை நோக்கி இவன் படுத்திருக்க அங்க அரிய தவக் காட்சி பெரிய மகிமையாய் விளங்கியது. பூழி உருப் பொருந்த, கதிர் முகம் வருட என்றதில் தவத்தின் நிலைமையும் உளத்தின் பரிவுகளும் பரவியுள்ளன. உண்மைகளைத் துருவி யுணர்க. வருண மந்திரம் எண்ணினன் விதிமுை ற வணங்கி. என்றதஞல் அந்த மந்திரத்தைச் செபித்து உருவேற்றி யோக நோக்குடன் உள்ளம் ஊன்றி ஒரு முகமாய் இக் குல மகன் மருவி யிருந்தமை அறிய வந்தது. கருதிய குறியை உறுதி யாக அடைய அலைவாய்க் கரையில் தலைமையான நிலைமையில் இவன் அருந்தவம் கிடந்தது அதிசய விளைவாயிருந்தது. * 'தத: ஸாகர வேலாயாம் தர்ப்பாங் ஆஸ்திர்ய ராகவ: அஞ்சலிம் ப்ராங்முக: க்ருத்வா ப்ரதிசிச்யே மஹோததே. ' 'பின்பு கடலின் கரையில் கருப்பைகளைப் பரப்பி அதில் அமர்ந்து கைகளைக் கூப்பிக் கொண்டு கிழக்கு முகமா நோக்கிக் கடல் எதிரே இராமன் படுத்திருந்தான்' என வால்மீகி முனிவர் கூறியுள்ளதும் ஈண்டு அறிய வுரியது.-) இவ்வாறு இரவும் பகலும் விரத சீலமாப் வருணனை எண்ணி இக் கருணையங்கடல் கடுக்கவம் புரிந்தது. ஏழு நாள் வரையும் அவன் வரவில்லை. கடலரசன் வராது போகவே இவ் வடலரசன் உள்ளம் கனன்ருன்; உருத்தெழுந்தான். மந்திர