பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3704 கம்பன் கலை நிலை நீர்மேல் நெருப்பு நேரே தோன்ருது; ஒரு வேளை தோன் றின் அது ஊழித் கீபோல் உக்கிர வேகமாய் உலகத்தை அழிக்க வல்ல காம் என்னும் குறிப்பு இங்கே கூர்ந்து சிந்திக்க வுரியது. கோதண்ட விரனுடைய கோபம் மூதண்டங்களையும் பேதித்து ஒழிக்கும் பேராற்றலுடையது என்பதை ஒராற்ருன் உணர்ந்து உண்மை நிலைகளை யெல்லாம் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். வருணனை எண்ணி வழிபட்ட கருணையங்கடல் அவன் வரா மையை நினைந்து நெஞ்சம் கொதிக்கது. அந்தக் கொதிப்பு கட லிலிருந்து Кат" ழுங்க வடவைக் கீபோல் கிளர்ந்தது ஆதலால் புன லிடை எரி என அனலின் இனம் தெரிய வந்தது. கருணைக்கடல் கோபக் கடலாக மாறியுள்ள காட்சியை மறுகிக் காண்கின் ருேம். யாண்டும் அருள் புரிபவன் ஈண்டு அழிவு செய்ய மூண்டு கின்ருன். விளைந்துள்ள விளைவுகள் விழைந்து சிந்திக்க வுரியன. முனியாதானை முனிவித்தீர் எனச் சுக்கிரீவன் காமதித்த போது இராமன் கொண்ட கோபத்தை அனுமானிடம் இலக்கு வன் இப்படிக் குறித்திருப்பது இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ள வந்தது. உரைக் குறிப்புகள் ஊன்றி உணரத் தக்கன. வானா வேங்கன் தாமதம் இம் மான வீரனுக்கு அன்று கோபத்தை விளைத்தது; வருண தேவனது தாமதம் இன்று சிற்றத்தை விளைத்துள்ளது. நெறிகேடுகளைக் கண்டபொழுது இங் நீதிமானிட்ம் பெருங்கோபம் மண்டி GF ழுகின்றது. விதிமுறை வழுவின் யார ாயிருந்தாலும் அவரைச் சீறியழிக்கவே இவ் விரன் விரைந்து எழுதலால் அந்த எழுச்சி கரும பரிபாலனத்தின் தகை மையாய் வளர்ச்சியடைந்து வந்துள்ளது. தாமரைச் செங்கண் சிவந்தன. என்றது நெஞ்சில் கொண்ட கோபத்தின் நிலை தெரிய நின்றது. எவரையும் குளிர நோக்கும் அழகிய கண்கள் கொதிப் பேறியுள்ளன. அவ் வுண்மையைச் சிவந்த தன்மை செம்மை யாக் காட்டியது. உரிய நீர்மையை ஊன்றிக் கானுக. உள்ளம் கனன்று இங்ங்னம் உருக்கெழுக்க விரன் நிலைமை களை நினைந்து கெடிது மொழிக்கான்: 'எனது அருமை மனைவி யை இழந்து மறுகி வருந்தியுள்ள நான் உரிய வழியை நாடி