பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3710 கம்பன் கலை நிலை இராவணன் பறிப்பத் தாரம் நீங்கிய தன்மையன். கன்னே இன்ன இன்னவாறு கடலரசன் எண்ணி யிருப் பான்; அந்த எண்ணத்தினலேதான் இகழ்ந்து கரந்துள்ளான் என்று இவ் விரன் இவ்வண்ணம் பரிந்து விரைந்தான். தன் மனேவியை இராவணன் கவர்ந்த கொண்டு போயிருக்கிருன்; அவனே யாதும்செய்யாமல் அயலே அகலவிட்டு அவமே இவன் அலைந்து திரிகின்ருன்’ எனக் கன்னேக்குறித்துச் சின்னத்தனமா எண்ணி யிருக்கலிஞலேதான் இவ்வளவு அவமதிப்பாக வருணன் ஒதுங்கி நிற்கிருன் என உள்ளம் வருந்தி யிருக்கிருன். இயல்பான சிவ சுபாவங்கள் இங்கே வெளியாயுள்ளன. கனக்கு நேர்ந்துள்ள கேடுகளை அயலார் அறியாதிருப்பினும் அறிந்து இகழுவர் என்று கன் உள்ளம் குன்றி உளைந்து உழல் வது மனித இயல்பாப் மருவியுள்ளது. அல்லல்களால் அவல மடைந்துள்ளவர் பல வகைகளிலும் கவலைகள் அடைய நேர் கின்ருர். எல்லாரும் எளிதாகவே எண்ணித்தான் இகழ்ந்து நிற் பார் என கினைந்து தளர்ந்து அவர் நெஞ்சம் கவலும் நிலைமை யைக் கமது கலேவனுடைய வாக்குமூலமாக் கவி ஈண்டுக் காட்டி யிருக்கும் காட்சி கருதிக் கான வுரியது. வீரம் நீங்கிய மனிதன். தன் வேண்டுகோளுக்கு விரைந்து வந்து வருணன் முகம் காட்டாமல் மறைந்து நிற்பதற்குக் காரணம் யாதாயிருக்கலாம்? என்று கருதி வரும்போது இறுதியில் இராமன் இவ்வாறு எண் னினன். உறுதிமொழி உள்ளத்தை உணர்த்தி யுள்ளது. வருணன் தேவர் இனத்தைச் சேர்ந்தவன். இராமன் மனிதர் மரபினன். உயர்ந்த சாதியில் பிறந்துள்ளோம் என்ற அந்தக் குலச் செருக்கால் கன்னே மதியாதிருப்பானே? என்று மறுகி யுளைக் தான். சாதிக் திமிரோடு வேறு கருவமும் மருவியிருக்கும் என உறுதி செய்தான். காரக்கை இழந்து கவித்திருக்கலால் வீரம் இல்லாதவன் என்று நினைந்து தான் அவன் ஈரம் நீங்கி இங்க னம் இழிவு செய்ய நேர்ந்தான் என அழிவு செய்யும் குறிப்பில் இவ் விழுமிய கோமகன் வெளியே ஆர்த்து உருத்தான்.