பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3712 கம்பன் கலை நிலை மறுமை கண்ட மெய்ஞ் ஞானியர் என்றது அவரது மாட்சி கெரிய வந்தது. இந்த உலக செல்வங்களை யெல்லாம் ஒரு சிறி தும் மதியாத பெரிய ஞான சீலர்களைச் சிறிய புலே வாழ்வில் உழலுகின்ற மனிதர் மதியாது ஒழியின் அகனல் அவர்க்கு யா தொரு குறையுமில்லை. உயர்ந்தாரை உவந்து பேணுக இழிந்த பேதைகள் என்னும் இழிபழி இவர்க்கே விளைகின்றது. இழிக்க புன்மை நெஞ்சர் உயர்ந்த நன்மையாளரை உணர்ந்து கொள் ளாமையால் ஊன நிலையிலேயே உழன்று ஈனமடைகின்றனர். பழகப் பழகப் பாலும் புளிக்கும்” என்னும் பழ மொழி மனிதனது உரிய நிலையைக் தெளிவாக வெளியாக்கி யுள்ளது. பால் அனைய மேலோரும் நாலு நாள் நேரே நெருங்கிப் பழக நேரின் மனித வுலகம் அவரை எளிதாக எண்ணி யாதும் மதி யாது அயலே அகன்று போகின்றது.)கண் எதிரே கண்டதை இகழ்ந்து அகன்று போவதும் காணுததை உவந்து புகழ்ந்து பேசுவதும் உலக இயல்பாய் விரிந்துள்ளது. பூவிரி உருவக் கண்ணிப் பொலங்குழை யிலங்கு சோதித் தேவரே எனினும் தோன்றச் சில்பகல் செல்ப வாயின் ஏவரே போல நோக்கி இகழ்ந்துரைத்து எழுவதன்றே மாவிரி தானே மன்ன! மனிதரது இயற்கை என்ருன். (1) முன்னம்ஒர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர் தம்மால் என்னவ ரேனும் ஆக இகழ்ந்திடப் படுப போலாம்; அன்னதே உலக வார்த்தை யாவதின் அறு அறியும்வண்ணம் மின்ன வின்று இலங்கும்வேலோய்! கின்னுழைவிளங்கிற்றன்றே. வரைமலி வயங்கு தோளாய்! வியாதியால் மயங்கி ர்ைக்குச் சுரைமலி அமிர்தத் தீம்பால் சுவை தெரிந் துண்ண லாமோ? விரைமலி விளங்கு பைந்தார் விஞ்சையர் செல்வம் தானும். அதுரைமலி பொள்ளல் யாக்கை மனித்தர்க்கு நகரலாமோ? (3) உள்ளிய மரங்கொள் சோலே மண்மிசை உறையு மாந்தர் ஒள்ளியர் ஏனும் தக்கது உணர்பவர் இல்லை போலாம்? வெள்ளியம் சிலம்பின் எங்கோன் விடுத்ததே ஏதுவாக எள்ளி ஒருரையும் ஈயாது இருந்தனே இறைவ! என்ருன். (4) (சூளாமணி) கேசரன் என்னும் விஞ்சையன் இவ்வுலகத்து அரசனே நோக்கி இவ்வாறு கூறியிருக்கிமுன். விஞ்சையர் வேந்தன்