பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3718 கம்பன் கலை நிலை கினைந்து நெஞ்சம் துடித்தாள். என்றும் குளிர்க்க இயல்பினே புடைய அவள் அன்று வெதும்பி நின்றது இவ் வென்றி விரணு டைய நிலைமையை நன்கு விளக்கியது. இவன் உள்ளம் நீரை நோக்கி வெதும்பியதால் உலகிலுள்ள வெள்ளங்கள் எல்லாம் வெதும்ப நேர்ந்தன. தெய்வ நீர்களும் செய்வகை தெரியாமல் ༥ན་ཚ༧ வெப்யதாய் வெதும்பி வெக் துயருழந்தன. பார்ப்பான் = பிரமதேவன். அவனுடைய கமண்டல நீரும் கடும் சூடாப்க் கொதிக்கது. கொள கொள எ ன்றகளுல் கொதி ப்பின் அளவு நிலையை அறிந்து கொ ள்ளலாம். எல்லை மீறிய கொதிப்பால் நீர் அல்லல் அடைந்துள்ளது. கங்கை நீரையும் கமண்டல நீரையும் குறிக்கது நீர்களா யுள்ளன யாவும் நெடுங் கொதிப்பேறிய அங் கிலேமை தெரிய. இராமனது அடுதிறலாண்மையையும் அதிசய நிலைமையையும் அவனது சுடு சரம் உலகம் அறிய அன்று உணர்த்தி நின்றது. 'ஒற்றைச் சரம்சுட்ட உட்கடல்போல் புறத்து ஒலமிட மற்றைக் கடல் வெந்தது எவ்வண்ணமோ மதமாஅழைக்க அற்றைக் குதவும் அரங்கர்வெங் கோபத்தை அஞ்சி அரன் கற்றைச் சடையின் இடையே வெதும்பினள் கங்கையுமே.” (திருவரங்கத்து மாலே, 43) நம் காவியக் கவியை அடியொற்றி இங்கனம் இது வந்துள்ளது. தரும மூர்த்தியான இராமனுக்குக் கோபம் மூளும்படி செய்தமையால் எங்கும் கொதிப்புகள் மூண்டன. முனியாகானே முனியுமாறு துணி செப்தா னே! என்று கடலர சனை உலகம் எல் லாம் இகழ நேர்ந்தன. அரக்கரினும் இர க்கம் கெட்ட கொடிய வன் என வையத்காரும் வானத்தாரும் அவனே வைது பழித்து வெய்துயிர்த்து கொங்தனர். உலகம் எல்லாம் பெற்றவன் முனியப் புக்கால் நடுவினிப் பிழைப்பது எங்ங்ன்? இங்ங்னம் யாவரும் அவலமுடையராப்க் கவலை அடைந்து கடலரசனைக் கடுத்து வெறுத்து அடுத்து என்ன விளையுமோ? என்று இன்னலுழந்து ஏங்கி நின்றனர். மற்றைய பூதம் எல்லாம் வருணனே வைத.