பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3587 மொழியில் அழகுற அலங்கரித்துச் சொல்லியிருப்பது விழுமிய நிலையில் எழில் ஒளி வீசி இன்பம் பயந்துள்ளது. கருணையங்கோயிலுள் புகுதற்கு இரண்டு வாயில்கள் அமைந்துள்ளன. அவை பெருமையும் பொறுமையும் என்பன. எவ்வளவு சிறியவர்களாயிருந்தாலும் கன்னே நாடிவந்தால் அவர்களுடைய சிறுமைகளை நினைந்து இகழ்ந்து தள்ளாமல் உவந்து பேணி உதவிபுரியும் பெருந்தன்மை யுடையவன் இராமன் என்பது இங்கே உணர்ந்து கொள்ள வந்தது. இந்தப் பெரும்ை யை உரிமையாகப் பயன்படுத்திக் கொண்டுபலர் பயன்பெற்றுள் ளனர். இனிய உபகாரம் தனி மகிமை யுடையது. கெடியதுயரங்களைச் செப்த கொடிய பகைவராயினும் எதி ரே வணங்கி வந்தால் அவருடைய பிழைகளை யெல்லாம் பொறு த்து அருள் புரியும் பெரிய பொறுமையாளன் ஆதலால் இராமனை அணுகுகற்குப் பொறுமையும் வாயிலாப் மருவியிருந்தது. பொல்லாத பகைவனேடு உடன் பிறந்த தம்பி உள்ளே புகவந்துள்ளான். அவனே விழைந்து ஏற்றுக் கொள்ளுவான? அல்லது இகழ்ந்து வெளியே கள்ளி விடுவான? என்ற ஐயமும் ஆலோசனைகளும் இங்கே துள்ளி எழும்: அந்தச் சந்தேகங்கள் நீங்கிச் சிங்கை தெளித்து கொள்ளும்படி பெருமை பொறுமைகள் ஈண்டு வாயிலாப் வந்தன. பொறுமை நிறைந்த பெருக்ககை ஆதலால் வந்தவனே உரிமையோடு அணைத்துக் கொள்ளுவான் என்னும் ஆதரவும் அருள் கிலேயும் அறிவுற கின்றன. குண நீர்மைகள் அரிய சீர்மைகளோடு இனிமை சுரங் திருக்கின்றன. தருமமும் தவமும் ஞானமும் இராமனே என் அறும் கன்ருகச் சூழ்ந்து காத்து நிற்கின்றன என்னும் அருமைக் காட்சியை இங்கே கூர்ந்து நோக்கி ஒர்ந்து உவந்து கொள்ளு கிருேம். உ யர்ந்த புண்ணிய மூர்த்தி என்பது உணர வந்தது.) டகண்ணன் என்றது மண்ணகத்தும் விண்ணகத்தும் மருவி யுள்ள யாவருக்கும் கண்போல் இனியவன் என இராமனது கனி நிலைமை தெரிய வந்தது. 'கண்ணுவான் என்றும் மண்ணேர் விண்னேர்க்குத்