பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3726 கம்பன் கலை நிலை காரியம் முடித்திருக்கிறது. ஒரு இமைப்பொழுதுள் அந்த நாச வேலையைப் பகழி முடித்து வந்திருத்தலால் அதனே எய்தவனு டைய அதிசய மகிமை துதி செய்ய வந்தது. இராமன் கருதிய படியே கைக்கணை உறுதியாகச் செய்து வருதலால் தெய்வீக மான உக்கிர வீர சக்தியாய் அது ஒளி பெற்றுள்ளது. முனிவன் செப்பும் சாபமே ஒத்தது. இராம பாணத்தின் அதிசய ஆற்றலை உய்த்துணரும்படி இந்த ஒப்புமையை உரைத்துள்ளார். அரிய தவ ஞானங்களே யுடைய பெரிய முனிவர்கள் உள்ளம் கொதித்துச் சபித்துச் சொல்லும் சாபம் போல் எதையும் ஒல்லையில் அழித்து விடும் எனப் பகழியின் எல்லையில்லாத வலிமையை இதல்ை உணர்ந்து கொள்ளுகிருேம். . இடம் பெயராமல் இருந்த இடத்தில் அமர்ந்து கொண்டே முனிவர் கனன்று சபித்தால் சபிக்கப்பட்டவர் உடனே |தி அமடைகின்றனர். நிலை பெயராமல் நின்ற இடத்தில் நின்று கொண்டே இராமன் பகழியை ஏவினன்; அது நெடிய கொலை யிலிருந்த தீவை அடியோடு அழித்துக் கடிது வந்தது ஆதலால் முனிவர் சாபத்தை இங்ங்னம் இனிது இணைத்துக் காட்டினர். குணம்என்னும் குன்றேறி நின்ருர் வெகுளி

  • : * or .

கணமேயும் காத்தல் அரிது. (குறள், 29) குன்றன்னர் குன்ற மதிப்பின் குடியொடு கின்றன்னர் மாய்வர் கிலத்து. (குறள், 898) இந்த அருமைத் திருக்குறள்கள் ஈண்டு ஊன்றி உணர வுரியன. பெரியோர்களுடைய உள்ளம் கொதிக்கும்படி செய்தால் அந்த இனம் அடியோடு அழிந்து போம்; அவர் இருந்த இட மும் கடக் கெரியாமல் காசமாய்ப் போய் விடும் என்பது இங்கே நன்கு தெரிய வந்தது. - - - * * பெரியோர் மிகவும் பொறுமையுடையவர்; வினே கோபம் கொள்ளார்; எவ்வழியும் சாந்தமாய்ப் பொறுத்தே யிருப்பர்; நெறி கேடுகள் செய்ய நேர்ந்தால் அவர் உள்ளம் கனன்று சபிக்கின்ருர்; அந்தச் சாபம் ஈசன் கோபம் போல் நாசங்களைச் செய்து விடுகிறது. முனிவரது முனிவு இனிது தெரிய வந்தது.