பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3728 கம்பன் கலை நிலை மாப்வினை இயற்றி முற்றும் வருணன் மேல் வந்த சீற்றம் தீவினை யுடையார் மாட்டே இங்கினைச் செய்தது. வருணனைக் கொல்ல வேண்டும் என்று கொதித்து மூண்ட கோபம் வேருப் மாறி அவுணரைக் கொன்று தீர்த்தது; அதற் குக் காரணத்தை இங்கனம் குறித்துக் காட்டியிருக்கிருர். வரு ணன் நல்லவன்; மதியின் மறதியால் விதிமுறை வழுவி நின்ருன்; பின்பு விரைந்து வந்தான்; உண்மையை உரைத்தான்; தன்மை யைத் தெரிந்து கொண்ட வீரன் தன் வில்லில் பூட்டிய கணக்கு இரை காட்டுக என்ருன். அவன் காட்டினன், இவன் கருமத் தை முடித்தான். கரும தருமம் மருமமாய் முடிந்துள்ளது. அவுணர் தீயவர் என்று வருணன் சொன்ன போதிலும் அது உண்மை என்று இராமன் உள்ளம் கெளிக்க பின்புதான் கையை விட்டுக் கணையை விடுத்தான். பாவிகள் மேல் ஏவும் பொழுதுதான் வாளி ஆவலோடு ஆர்த்துத் துடிக்கும்; அத் துடிப்பை ஒர்ந்து இவ் வீரன் கடுத்து விடுத்து முடித்து வருக லால் கருமங்கள் கருமங்களாய்த் தழைத்து வரலாயின. தீவினையுடையார் மாட்டே சீற்றம் தீங்கினைச் செய்தது என்றது ஈங்குக் கூர்ந்து நோக்கத் தக்கது. தீயவரை இராமன் அழித்தான் என்னமல் சீற்றம் அழித்தது என்ருர். இராமகோபம் வினே வராது, தீமை கண்ட போதுகான் சீறி வரும்; வந்த அது தன் வேலையை முடித்தருளும்; அந்த முடிவுகளை இராமன் சாட்சியாய் நின்று கண்டருளுவான் என்பது இங்கே கான வந்தது. அதிசயமான பரம நீர்மை துதி செய்ய நின்றது. --- - நல்லவர்களுக்கு அல்லல் நேர்ந்தாலும் அது ஒல்லையில் நீங் கும்; தியவர் எவ்வழியும் அழிந்தே - திருவர் என்பது இங்கே நிகழ்ந்துள்ள சரித நிகழ்ச்சியால் உணர்ந்து கொள்ளுகிருேம். ". . . கோதண்டத்தில் அம்பைப் பூட்டிய பின் அதனைச் சும்மா எடுக்கக் கூடாது; ஏதேனும் குறியை கோக்கி நேரே விட்டு விட வேண்டும் என்பது ஈண்டு விளங்கி நின்றது. மந்திர சக்தி களையுடைய அதன் அக்கரங்கங்கள் அளவிடலரியன. ல் எவரையும் வெல்ல வல்ல அதிசய ஆற்றலுடைய இராமன் முதலில் வருணனை கினைந்து பண்ரிவாய்த் தவம் புரிந்ததும், பின்பு