பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3588 கம்பன் கலை நிலை தண்ணுர் வேங்கட விண்ணுேர் வெற்பனே.” (திருவாய்மொழி) ќлт"foуг நம்மாழ்வார் எண்ணியுருகியுள்ளதும் ஈண்டு எண்ண வுரியது. எவ்வுயிர்க்கும் இன்ப நிலையம் என்பது தெரிய நின்றது. செக்தாமரை மலர் போன்ற அழகிய கண்களையுடைய வனும், எல்லார்க்கும் கண்போல் உள்ளவனுமான இராமனைக் கண்டு வானரத்தலைவன் விடனன் நிலைமையைக்கூறவே அக் கோமகன் அயலேயிருந்த துணைவர்களை நோக்கி நினைவுகளை விசாரித்தான். விசாரணை விநய சீலமாப் விரிந்து நின்றது. ஆய்ந்து சூழ்ந்தது. கன்பால் அன்பால் அடைக்கலம் புகவந்துள்ளவனே இக் கொடைக் குரிசில் உடனே தன்மூப்பாகத் துணிந்து சேர்த்துக் கொள்ளவில்லை. மந்திரிகள் போல் மருவியுள்ள அந்தரங்க கண் பர்களிடம் ஆராய நேர்தான். நேர்ந்த நம்பி தனது அருமைத் கம்பியை முதலில் கேட்டிருக்க வேண்டும்; அங்கனம் கேட்க வில்லை. சுக்கிரீவனேயே முன்னதாகப் பக்குவமாய் நோக்கினன். பண்போடு வினவினன். கைப்புகற் பாலனே? கழியற் பாலனே? - கேள்வி கேட்டிருக்கும் மாதிரியைப் பாருங்கள். மயிக்கன் கூறியன யாவும் உடனிருந்து கேட்டவன் ஆக லால் வேறு ஒன்றும் கூருமல் வானர வேந்தனிடம் இம் மான விரன் இவ்வாறு உசாவினன். நம்முடன் உறவாய்க் கூடி வாழ விழைந்து உரிமையுடன் நம்மை நாடி வீடணன் வந்திருக்கிருன்; இவனே நாம் சேர்த்துக் கொள்ளுவோமா? அல்லது கள்ளி விடு வோமா? என்று கருத்தாவின் தலைமையில் கேட்காமல் கருமத் தின்நிலைமையில்கருத்தோடுவினவியிருப்பதுவிநயம்மிகவுடையது. வந்தவனுடைய தகுதி என்ன? நாம் அணைத்துக்கொள்ளத் தக்கவன? அகற்றிவிட வுரியவன? அவனுடைய கிலேமை நீர்மை களையும், நம்முடைய தலைமை சீர்மைகளையும் கூர்மையாக ஒர்ந்து நாம் செய்யவுரியதை ஐயமறத் தெளிந்து சொல்லுக என்னும் குறிப்புகள் எல்லாம் வினவிய உரையில் விரவியுள்ளன.