பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3734 கம்பன் கலை நிலை யுற்றிருப்பது குடி கேடாம். மதி கெட்ட கீழ்மக்கள் மலைப் பாம்புக்கு உவமையாய் நேர்ந்தனர். கண்கூடாப் பட்டது கேடு எனினும் கீழ்மக்கட்கு உண்டோ உணர்ச்சி மற் றில் லாகும்---மண்டெரி தான்வாய் மடுப்பினும் மாசுனம் கண்துயில் வ பேரா பெருமூச் செறிந்து. (நீதிநெறிவிளக்கம், 34) நம் காவியக் கவியை அடியொற்றி இது வந்துள்ளது. உணர்ச்சி கெட்டவர் கீழ் மக்களாய் இழிந்து படுவர் என்னும் உண்மை இங்கே உணர்ந்து கொள்ள வங்தது. உறுவ தை உணர்ந்து ஊக்கி ஒழுகினர் உயர்ந்து திகழ்கின்ருர்; அங்க னம் உணராது அயர்ந்தவர் இழிந்து ஒழிகின்ருர். நலல வுணர்வுடையாாப் எல்லா வழிகளிலும் உயர்ந்து மனி தர் சிறந்து வாழவேண்டும் என்று நம் கவிஞர்பிரான் நினைந்து வந்துள்ளமையை இங்கே உணர்ந்து கொள்ளுகிருேம். காவியத் தை நடத்திக் கொண்டு போவதில் அவருடைய சீவிய வுணர்ச்சி கள் இடையிடையே இனிது தெரிய வருகின்றன.) மலைகளில் வாழ்ந்து வந்த சிங்கங்களும் புலிகளும் கரடி களும் யாளிகளும் கடலில் விழ்க்க பொழுது அங்கே சுருமீன்க ளால் கொல்லப்பட்டன. பெரிய வலிகளையுடைய அவை நிலை மாறியதால் சிறிய மீன்களால் இழிந்து அழிந்தன. தம்முடைய தானம் தவறினல் எவரும் மானம் அழிந்து மடிவர் என்பதை அவற்றின் அழிவு நிலை விழிகெரியச் செய்தது. தம் கிலே நீங்கிற்று என்ருல் ஆரிடை அழிவு வாராது? நெடிய வலிகளையுடைய மலை விலங்குகள் நீரிடையே நிலை குலைந்து அழிந்து பட்டமையால் இங்கனம் பரிந்து உரைத்தார். நெடும்புனலுள் வெல்லும் முதலே அடும்புனலின் நீங்கின் அதனைப் பிற. (குறள், 495) இட வலியைக் குறித்துத் தேவர் உரைத்திருக்கும் இது இங்கே எண்ணி யுணரத் தக்கது. நீரில் இருந்தால் யானையையும் முதலே வென்று விடும்; அது நிலத்தில் வந்தால் நாயும் அதனைக் கொன்று தொலைக்கும் என்க. தமது கிலே வழுவின் யாரும் எளிதே அழிந்துபட நேர்வர் என்பது இங்கே மலை விலங்குகள்