பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 3589 அடைக்கலமாய் அவாவி வந்தவனே விரைந்து அணைத்துக் கொள்ளவேண்டும் என்னும் ஆவல் இராமன் உள்ளத்தில் இருங் தமையால் கைப்புகற்பாலனே? என அனுகூலமான விஞ் முன் லுற வந்தது. மனத்தில்விரும்பியுள்ளகை வாக்குவிரைந்து வெளிப் படுத்தி விடுகிறது. வினவிய நிலையிலேயே விழைவு வெளியாயது. தன் கருத்தை முதலில் தெளிவாக வெளியிடாமல் துணைவர் களுடைய மன நிலைகளை அறிய இம் மதிமான் அதி விநயமாய் வினவியருளினன். கேட்ட கேள்வி கேண்மை கழுவி நின்றது. சுக்கிரீவன் உரைத்தது. வேதம் முதலிய கலைகள் யாவும் ஒதியுணர்ந்த மகா மேதையான நீங்கள் என்னிடம் ஆலோசனை கேட்டது அதிசய மாயுள்ளது. நீதி நிலைகளை நெறிமுறையே அறிந்த மதிநலம் இலகுயினும் அதிபதி அருளினமையால் என் மனதில் தோன்றி பதை நான் நேரே சொல்லுகின்றேன். சரியோ, பிழையோ சிறியேன் அறியேன், பெரியோய் கேட்டருளுக” என இன்ன வாா பணிவாய் முன்னுரை மொழிந்து சுக்கிரீவன் கூறினன். வெம்முனே விளே-தலின் அன்று; வேருெரு சும்மையான் உயிர்கொளத் துணிதலால் அன்று தம்முனேத் துறந்தது தரும நீதியோ? செம்மையில் அரக்கரில் யாவர் சீரியோர்? (1) தகையுறு தம்முனேத் தாயைத் தந்தையை மிகையுறு குரவரை உலகின் வேந்தனேப் பகையுற வருதலும் அறந்த பண்பிது நகையுறல் அன்றியும் நயக்கற் பாலதோ? (9) மிகைப்புலம் தருமமே வேட்ட போதவர் தகைப்புலம் துறந்துபோய்ச் சார்தல் அன்றியே நகைப்புலம் பொதுவுற நடந்து நாயகன் பகைப்புலம் சார்தலோ பழியின் நீங்குமோ? (3) வாக்குறு வனேகழல் தம்முன் வாழ்ந்தகாள் சீர்க்குற வாயிடைச் செறுநர் சிறிய போர்க்குற வன்றியே புகுந்த போதிவன் ஆர்க்குற வாகுவன் அருளின் ஆழியாய்! (4)