பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராம ன் 3745 வெளியே வந்து நிலா வெளிச்சத்தில் உல்லாசமாய் அமர்ந்திருங் தான். எண்ணங்கள் பல நெஞ்சில் எழுந்து உலாவின. தனது ஆவி அனைய தேவியின் நினைவுகள் பெரிதும் மேவி விரிந்தன. உள்ளம் காதலியைக் கருதி உருகினமையால் வெளியே விரிந்து கின்ற இனிய நிலவொளியும் இன்னுமையாய்த் தோன்றியது. அந்தச் சந்திரிகையில் இந்த இராமச்சந்திரன் மனைவியை நினைந்து மறுகியிருந்த நிலைமையைக் கவி நேரே வரைந்து காட்டி யிருக்கிரு.ர். அக் காட்சிகளை அயலே காண வருகிருேம். செயிர்ப்பினும் அழகு செய்யும் திருமுகத்து அணங்கைத்திர்ந்து துயிற்சுவை மறந்தான் தோளில் து.ாய்கிலாத் தவழும்தோற்றம் மயில்குலம் பிரிந்த தென்ன மரகத மலைமேல் மெள்ள உயிர்ப்புடை வெள்ளைப் பிள்ளே வாளரா ஊர்வ போன்ற. (1) மன்னெடு நகர மாடே வருதலால் வயிரச் செங்கைப் -- பொன்னெடுந் திரள்தோள் ஐயன் மெய்யுறப் புழுங்கி கைந்தான்; பன்னெடுங் காதத் தேயும் சுடவல்ல பவளச் செவ்வாய் அன்னெடுங் கருங்கண் தீயை அணுகில்ை தணிவது உண்டோ? (ஒற்றுக் கேள்விப் படலம்22-25) இந்தப் பாசுரங்களைக் கருத்தான்றிப் படித்துப் பாருங்கள். குறிப்புகளைக் கூர்ந்து ஒர்ந்து உணர்ந்து கொள்ளுங்கள். அன்பு ரிமைகள் அனுதாபங்களில் பெருகி இனிய பண்புகளை மருவி இன்பச் சுவைகளை விளைத்திருக்கின்றன. செயிர்ப்பினும் அழகு செய்யும் திருமுகத்து அணங்கைத் தீர்ந்து துயில் சுவை மறந்தான். இந்தச் சொல் ஒவியத்தில் சீகையையும் இராமனையும் நாம் உள்ளம் கூர்ந்து பார்க்கின்ருேம். உற்றுள்ள நிலைமைகளை ஒர்ந்து கொள்ளுகிருேம். செயிர்ப்பு=சினம், கோபம். சினந்து சீறிை லும் சீதையின் முகத்தில் அழகு பொலிக் து விளங்கும் என்பது இங்கே தெளிந்து கொள்ள வங்தது. கோபம் மண்டியபொழுது எந்த முகத்திலும் அழகு மாறிப் போம். நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. (குறள், 304) முகத்தின் நகையையும் அகத்தின் உவகையையும் கோபம் 469