பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3746 கம்பன் கலை நிலை கொன்று விடும் என்றகளுல் அகன் கொடுமையும் கோரமும் அறியலாகும். நகை என்றது முகமலர்ச்சியை. மனத்தின் மகிழ்வும் முகத்தின் பொலிவும் சினத்தால் ஒழிந்து போம்; அத்தகைய சினத்திலும் சீதையின் திருமுகம் எழில் சுரங் து நிற்கும் என்றது எத்தகைய வியப்பு உள்ளம் கனன்ற கோபத்திலும் அழகு செய்யும் என்ற கல்ை உவகையா யுள்ள பொழுது அகன் எழிலும் பொலிவும் எ ல் வள வு விழுமிய நிலையில் ஒளி செய்திருக்கும்! என்பது வெளியாயப் நின்றது.) _ திரு. அணங்கு என்றது தெய்வீக நீர்மைகள் தெரியவந்தது. அதிசய அழகுடைய அக்கக் தேவியைப் பிரிக்கமையால் ஆவி : பதைத்து எவ்வழியும் இராமன் அலமந்திருந்தான். பிரிவுத்துயர் எல்லை மீறிய அல்லலாப் உள்ளத்தை வருத்தி வந்தது. அங்க மன வேதனையால் மறுகிக் கண் உறங்காமல் கவன்றிருந்தான் ஆக லால் துயில் சுவை மறந்தான் என்ருர்.)

மயில்இயல் பிரிந்தபின் மான கோயில்ை

அயில்விலன் ஒருபொருள் அவலம் எய்தலால் துயில்விலன் என்பது சொல்லற் பாலதோ? உயிர்கெடிது உயிர்ப்பிடை ஊசல் ஆடுவான்.” 'சங்கிற் பொலிந்த தகையாளைப் பிரிந்த பின்பு கங்குற் பொழுதும் துயிலாத கண்ணன்’ இன்னவாறு முன்னம் வந்துள்ளன ஈண்டு எண்ணவுரியன. மனைவியைப் பிரிந்த பின் இராமன் துயில் தறந்து துயருழங் திருக்க நிலைமையைக் காவியத்தில் பல இடங்களிலும் கண்டு பரிவு கொண்டு வருகிருேம். அயில்விலன்; துயில்விலன்; என்றது எவ்வளவு அவல நிலை! அயிலல் = உண்டல். துயிலல் = உறங்கல். உணவை வெறுத்து உறக்கத்தை விடுத்து மனைவியையே கினேக்து மறுகி மயங்கி உருகி யிருந்துள்ளான். துயிலின் சுவை. உணவும் நீரும் போல் உறக்கமும் மனிதனுக்கு இயற்கை உரிமையாய் அமைந்திருக்கிறது. துங்கும் சுகம் பிரமச் சுகம்;

  1. இந் நூல் பக்கம் 2179, வரி 5 பார்க்க. * இந் நூல் பக்கம் 3376, வரி 16 பார்க்க.

- - -