பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3749 மென் தோள் துயிலே இழந்து நின்றமையால் தன் துயிலே மறந்து இராமன் தவித்திருந்தான். துறந்தான் என்னுமல் மறந்தான் என்றது கினைந்து சிந்திக்க வுரியது. ஆகாயத்திற்குச் சூரியன்; சபைக்குக் கற்றவன்; சய னத்துக்கு மனைவி; மனக்கு மகன் இனிமையான மகிமையாம் என மேலோர் மதித்துள்ளனர். கண்ணுக் கினிய சபைக்குமணி கற்ருேனே: விண்ணுக் கினியமணி வெய்யோனே-வண்ணகறும் சந்த முலையாள் சயனத்து இனியமணி - மைந்தன் மனேக்கு மணி. (நீதிசாரம்) இந்த விதமாய் அமைந்திருந்த இனிய மணியை இழந்துள் ளமையால் இராமனது கண்கள் துயிலாமல் க.அழ்ந்திருந்தன. இன்ப மனைவியைப் பிரிந்து துன்பம் தோய்ந்து துயிலிழக் திருந்த இந்தச் சுந்தரன் அன்றிரவு சுவேல மலைச் சாரலில் தனி யே அமர்ந்திருந்தான். சந்திரிகை எங்கும் விரிந்து விளங்கி பது. அந்த நிலவு இக் குலமகன் திருமேனியில் பாய்ந்து எதிர் ஒளி விசி நின்றது. அந் நிலையினைக் கவி காட்டியிருக்கிருர், அக் காட்சி அரிய கலையை நீட்டி இனிய சுவையை ஊட்டி யிருக் கிறது. உள்ளக் கண்ணுல் ஊன்றிக் காணுங்கள். (தோளில் கிலாத் தவழும் தோற்றம் | - மரகத மலைமேல் வெள்ளைப்பிள்ளை வாளரா ஊர்வ போன்ற. இந்தக் காட்சியைக் கருதிக் காணுகிருேம். மானச மரு மங்களை மறுகி புணர்கின்ருேம். பசிய கோலத் திருமேனியகு கிய இராமன் தோளில் வெண்ணிறமான நிலவொளி தவழ்ந்து விளங்கியது. மரகத மலைமேல் வெள்ளைப் பாம்புக்குட்டி மெள்ள ஊர்ந்து திரிந்தது போல் துலங்கி நின்றது.) உரிய காகலியைப் பிரிந்திருத்தலால் இனிய நிலவு துயர மாய்த் தோன்றியது. மனைவி மருங்கு இருந்தால் அந்த நிலவு இனிய போகமாய் இதம் புரிந்திருக்கும். அவள் இல்லாமை யால் அது அல்லலான துனியாய்த் துயர் புரிந்தது. காதலருடைய காம போகங்களுக்குச் சேமத் துணையா யுள்ள நிலவு அவரது பிரிவில் பெரிய துயரமாய் முறுகி கிங்கிறது.