பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3752 கம்பன் கலை நிலை கா! என்ருள். மதிப்பாதி= பிறைச்சந்திரன். வெள்ளைப் LSeitors அரா என்றதை உள்ளி வந்துள்ளது போல் இது உணர வந்தது. --- செவ்வாய்த் தி. போர் மேல் மூண்டு எழுந்த இராமன் படைகளோடு வந்து பாசறையில் கங்கினன். இரவு வந்தது; இலேக் குடிசை முன் இனிய புல் கரையில் அமர்ந்தான். நிலவொளி பரந்திருக் தது. அந்த இனிய சமையத்தில் மனைவியை நினைந்து மனம் மிக மறுகி இக் குலமகன் துனியுழந்திருந்தான். ஐயன் மெய்யுறப் புழுங்கி கைந்தான். இராமன் உள்ளம் நொந்திருக்க நிலையை இது உணர்த்தி யுள்ளது. பிரிவிலுள்ள காதலியைக் கருதி மறுகி யிருக்கிருன். * அன்புத் துணைவி சிறைப்பட்டுள்ள இடத்தின் அருகே வங் துள்ளமையால் துன்பத் துடிப்புகள் மிகுந்திருந்தன. எப்பொ ழுது காண்போம்? என்ற வெப்பும் வேட்கையும் எல்லை மீறி நின்றமையால் உள்ளம் ஊசலாடி கைந்தது. நெடுங்காதத் தேயும் சுடவல்ல தீ அணுகினல் தணிவது உண்டோ? கடலுக்கு அப்பால் வெகு தாரத்தில் இருக்க போதே உட லையும் உயிரையும் வருத்தி எரித்து வந்த தீ அருகே அணுகிய பொழுது எவ்வளவு கொடுமையாய் எரிக்கும்! என்பதை இங்க னம் குறிப்போடு வெளிப்படுத்தியிருக்கிரு.ர். கிட்கிந்தை முதலிய நெடுங் கொலேகளிலுள்ள பொழுதே அடுத்துயர் செய்து வந்த 4 ') காபம் துணைவியின் அருகில் நெருங்கியுள்ள இவ் வமையம் கொடுத்துயரங்களாய்க் கொதித்து எழுந்தது. ஆவித் துணையை எப்பொழுது காணுவோம் என்ற சீவத் துடிப்பு வேனவாவாப் விரிந்து வெப்பை விளைத்துள்ளது. பவளச் செவ்வாய், கருங்கண் தீ எனச் சீதையை இங்கே இப்படிக் குறித்திருக்கிரு.ர். வெம்பி வெதும் பித் துன்பத்தில் உழக் து துடிக்கும்படி இராமநாதனேக் ககித்து வருதலால் அக் காதலியை இவ்வாறு காட்டியருளினர்.) பவளம் போன்ற சிவந்த வாயையும் கரிய பெரிய கண்களை புமுடைய அழகிய சீகையைக் தீ என்று இவ்வள வு அழகாக