பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3754 கம்பன் கலை நிலை ஒற்றர் புகுந்தது. அந்தச் சாரணர் இருவரும் கானைகள் தங்கியுள்ள இடக்கை அடைந்தார். பாடி அயலே நின்று படைகளைப் பார்த்தார். கடல்கள் பொங்கி வந்துள்ளதுபோல் படைகள் வங்துள்ளன என்று வியந்தார். உள்ளே புகுந்து எல்லா வகைகளையும் நேரே கான நெஞ்சம் துணிந்தார். வானரங்கள் போல் வடிவம் கொண்டார். சேனைகளிடையே புகுந்தார். இடங்கள்தோறும் உலாவி உளவுகள் ஒர்ந்து வந்தார். இரவு ஏழு நாழிகையானதும் விபீடணன் அதிக எச்சரிக்கையுடன் பாசறையைச் சுற்றி ஆராய்ந்து வந்தான். மாய வஞ்சங்கள் கிறைக்க கொடிய அரக்கருடைய ஊர் அருகே படைகள் வந்து தங்கி யுள்ளமை யால் ஏதேனும் இடையூறுகள் நேர்ந்துவிடுமோ? என்ற கவலை யோடு யாதும் கண்ணுறங்காமல் பாண்டும் கூர்ந்து பார்த்துப் பாதுகாப்புடன் ஒர்ந்து வந்தான். அவ்வாறு வருங்கால் கள வாகப் புகுந்து உளவுகள் ஆய்ந்து உருவம் கரந்து உரிமையாளர் போல் மருவி வருகிற அந்த இருவரையும் கருதி நோக்கினன். கள்ளம் கண்டது. கபட சிங்கனேயுடன் அதிமருமமாய்க் கரங்து திரிகிற அவ ரது செயல் இயல்களை விரகோடு கூர்ந்து நோக்கி வந்த விபீடணன் வேவுபார்த்து வருகிற கள்ளர் என்று அவரை உள்ளம் துணிந்து கொண்டான். மெள்ளப்போப்ப் பிடித்தான். குரங்குகள் போல் உருவங் கொண்டுள்ள அவர் காங்கள் பாசறையைக் காவல் புரிந்து வருகிருேம்' என்று பணிவுடன் உரைத்தார். விடனன் வெருட்டி அரக்கர் பாஷையில் வினவி ஞன். அந்தப் பேச்சே கெரியாதவர்போல் அவர் பாசாங்கு செய்து விழித்தார். இருவர் சிகைகளையும் இடக்கரத்தால் ஒருங்கே பற்றினன். இங்கே உள்ளே புகுந்து உளவுகள் ஒர்க் துவரும் கள்வர்கள் இவர்’’ 3T s୪T அங்கே கூடி கின்ற குரங்குகளிடம் குறித்தான். உடனே வானரங்கள் பாய்ந்து பிடித்து அடித்து உதைத்து விரைந்து கொல்ல மூ ண் ட ன. 'ஆண்டவனிடம் கொண்டு போவோம்’ என்று அக் கூட்டத்தை விலக்கி அந்த இருவரையும் விடனன் அழைத்து வங்கான். இராமனது அருகே ரைவே "ஐயோ! ஆண்டவா! இந்தப் பாவி