பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3762 கம்பன் கலை நிலை கள் என இவ்வாறு இக் கருணை வள்ளல் கூறவே விபீடண லுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வந்தது. ஆ எம் வள்ளல் எவ்வளவு வெள்ளை உள்ளத்தராய் இருக்கிருர் கள்ளம் கபடுகள் யாதும் அறியாத நேர்மையான நெஞ்சமுடைய இவ் வீரமூர்த்தி கொடிய வஞ்சகர் நிறைந்த அரக்கர் நாட்டை அடைந்துள் ளாரே! என்று ஆர்வம் மீதுார்ந்து அழுதிருக்கிருன். அவனு டைய பரிவும் பண்பும் உறவும் நண்பும் உரிமையாய் ஒங்கி உள் ளத்தை உருக்கி யிருக்கின்றன. அங்கனம் உருகி அழுதவன் உண்மையைத் தெளிவாக உரைத்தான். இவர் கம் இனத்தவர் அல்லர், இராவணன் தந்த ஒற்றர். உருவ நிலையைக்கண்டு குரங்குகள் என்று இரங்கியருளிய இராமனுக்கு இவ்வாறு உண்மையை விடணன் உறுதியாக உரைத்துள்ளான். உரையுள் அவனுள்ளத்தின் பரிவுஒளிர்கின்றது. இவன் சுகன்; அவன் சாரன் என இறுதியில் அவருடைய பெயர் விவரங்களையும் தெளிவாகத் தெளியும்படி சொன்னன். இலங்கைத் தம்பி இப்படிச் சொல்லவே அந்தக் கள்வர் உள்ளம் துணிந்து உரைக்க நேர்ந்தது வியப்பாப் நின்றது. 'இராமநாதா! இவன் கொடிய வஞ்சகன், நமது காயை எடுக் துக்கொண்டுபோன தீய இராவணைேடு உடன் பிறந்தவன்; நாம் படைகளோடு திரண்டு வருவதை அறிக்கதும் அரக்கர் குலம் அடியோடு அழிந்துபோம் என்று கலங்கினன்; நம்மை நேரே எதிர்த்து வெல்லமுடியாது என்று தெரிந்தான், நய வஞ் சகமாய் இங்கு வந்து உள்ளே புகுந்தான்; கோளை மூட்டிக் கலகத்தை விளைத்துக் குரங்குகள் ஒன்ருேடு ஒன்று அடித்துச் சாகும்படி இந்தக் கெடு காலன் கேடு செய்ய மூண்டுள்ளான். நாங்கள் இருவரும் உண்மையாகவே குரங்குகள்; இவ் வெய்ய வன் பொப்யே சொல்லுகிருன், உள்ளம் கள்ள மாப் வந்து ஈங்கு ஊறுபாடுசெய்கிற இவனே உடனே ஒழித்து நீக்கி உங்கள் பாத ஊழியர் ஆகிய எங்களைப் பாதுகாக்கருளுங்கள்” என முழுதும் மெய்யர் போல் நடித்துக் கொழுத கையராய் அழுது மறுகி இங்ங்னம் அவர் முறையிட்டு நின்ருர். வாய் வார்த்தைகள் வானரங்கள் போலவே இருந்தன ஆதலால் அயல் நின்றவர் பலரும் திகைக்கார். விபீடணன்