பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3766 கம்பன் கலை நிலை கில் இருக்க நேர்ந்தன என்று நான் உரைத்ததாக அவனிடம் உரையுங்கள். சிவபெருமானும் திருமாலும் அண்டகோடிகளி லுள்ள தேவர் யாவரும் ஒருங்கு சி. டி. இராவணனுக்குத் துணை யாப் கின்று காத்தாலும் அவனுடைய கலைகளே அறுத்துக் கரை யில் உருட்டுவேன்; பரசுராமன் அரசர் குலத்தைக் கருவறுத்தது போல் நான் அரக்கர் குலக்கைக் கருவறுத்து எ ன் தங்தையாகிய சடாயுவைக் கொன்ற பழிக்குப் பழி தீர்த்துப் பிதிர் தேவகை களுக்கு விரப்பலி ஊட்டுவேன். நெஞ்சம் துணிந்து வஞ்சமாப் வந்து மாய வேலை செய்து எனது தாய மனைவியைக் கவர்க்அ கொண்டு போய்த் தன் ஊரில் சிறை வைத்துள்ள அக்கக் திய பாவியைச் சுற்றத்தோடு எரிவாய் நரகத்தில் சிறை வைப்பேன்; இலங்கை ஆட்சியை இழந்து நரகமே காணி ஆட்சியாக அவன் அல்லலுறுவகை மூகண்டங்களும் கானும்படி என் கோதண் டம் செய்யும்; விரைந்து நடக்க நேர்ந்துள்ள இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் முன்னதாகவே அவன் அறிந்து கொள்ளும்படி இப் பொழுதே போப் நீர் உரைத்து விட வேண்டும்; வேவு பார்க்க வந்த விேர் இங்கே யாவும் பார்த்திருப்பீர் என்று நம்புகின் றேன்; மேலும் ஏதேனும் பார்க்க வேண்டுமானுல் சுற்றிப் பார்த்துக் கொள்ளும், ஈண்டு யாரும் யாகொரு அல்லலும் எவ் வகையிலும் உமக்குச் செய்ய மாட்டார்; நான் அபயம் தங்துள் ளமையால் பயம் பாதுமின்றி உள்ளம் துணிந்து நீர் ஒல்லையில் வெளியே போகலாம்” என இவ்வாறு இவ் விர வள்ளல் கூறி விடுத்தான். விடவே தலைமேல் கைகளைக் கூப்பிக் கொழுது உயிர் பிழைத்தோம் என்று அயலே அவர் விரைந்து போயினர். (இராமன் திருவாயிலிருந்து இங்கே வெளி வந்துள்ள வச - னங்கள் அவனுடைய நீதி முறைகளையும் நெறி நிலைகளையும் விர பராக்கிரமங்களையும் தீர கைரியங்களையும் உள்ளக் கொதிப்பு களையும் உபகார நீர்மைகளையும் உறுதி கலன்களையும் அரிய பல பண்பாடுகளையும் உலகம் அறிய உணர்த்தி யுள்ளன. கர வாய் ஒற்றியறிய வங்க அவ் ஒற்றர் இவ் வெற்றி வீரனு டைய உரைகளைக் கேட்டதும் வியப்பும் விம்மிகமும் அடைந்து அரக்கர் குலம் அடியோடு அழிந்தது என்று முடிவு கொண்டு ,அகன்று செடிய பல சிந்தனைகளோடு நேரே சென்ருர் لتله - يا 5ه