பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3781 உம்பர் மந்திரிக்கு மேலா ஒருமுழம் உயர்ந்த ஞானத். * . தம்பியிே சாற்றிப் போனன் என்பதும் சமையச் சொன்னன்.(9) ஈதெலாம் உணர்ந்தே யுைம் என்குலம் இறுதி யுற்றது ஆதியின் இவல்ை என்றும் உன்றன்மேல் அன்பி லுைம் 1வேதனை நெஞ்சுள் எய்த வெம்பியான் விளைவ சொன்னன் சீதையை விடுதி யாயின் திருமித் தீமை என்ருன். (10) - (இலங்கைகாண் படலம்-7-16) ---- அரக்கர்குலத்தலைவனகிய முதியவன் கூறியுள்ள உணர்வு ரைகள் இவ்வாறு பெருகி வந்துள்ளன. உயர்ந்த அாலறிவும் உலக அனுபவமும் உடைய சிறந்த மதிமான் ஆதலால் அவனு டைய வாய் மொழிகள் உறுதிகலங்களை உணர்த்தி ஒளிமிகுந்து - னழுக்கன. மூண்டுள்ள பகைமையின் தகைமைகளை அதிவிநய மாய் விளக்கி மதிகலங்களை இனிது ஊட்டியிருக்கிருன். ... o. ‘அரசே! சம்மோடு போர்புரியப் படைகளுடன் இங்கே வந்துள்ளவன் தசரதன் என்னும் ஒரு மன்னன் மகன்; உருவில் மனிதன்; ஆயினும் உண்மையில் ஒர் அதிசய நிலையினன். பரம பதகாதனே இந்த வடிவில் வந்துள்ளதாக வதந்திகள் உலாவி வருகின்றன. கேவாதி தேவனை திருமாலின் ஒரே அமிசமே இராமன். இலட்சுமணன் என்னும் நாமங்களை மேவி அண்ணன் தம்பிகளாய் ஈண்டு எய்தியுள்ளனர் எனச் செய்திகள் பரவியிரு க்கின்றன. அந்த மூத்தவன் கையில் உள்ளவில் அகில் உலகங் * களையும் ஒருங்கே வெல்ல வல்லது; அம்புத ஆற்றல் உடையது. சில தினங்களுக்கு முன்னே இங்கே அாதனப் வந்து ஏகங்கள் பல செய்து போனவன் வேகங்களை யெல்லாம் நன்கு தெளிந்த வன். சிவபெருமான் திருவருளும் வாயுதேவன் அமிசமும் அவனிடம் மருவியுள்ளன; இனிவருகிற பிரமபதம் அவனுக்கு உரியது; அந்தப் பதவியை அவனுக்கு இராமன் அருளியிருக்கி முன்; ஆகவே இக்க இருவரும் எந்த கிலேயினர் என்பதைச் சமுகம் சிந்தனை செய்யவேண்டும். சேனைத்திரள்களாய்த் திரண்டு வந்துள்ள வானரங்கள் எல்லாம் தேவர்களே என யோக சித்தர்கள் யாவரும் கூறுகின்றனர். இங்கே சிறையில் மறுகியுள்ள பதிவிரதை அமுதத்தோடு தோன்றிய இலட்சுமியே என்று ஆன்ருேர் பலரும் மொழிகின்றனர். சக்கரவர்த்திக். --