பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3786 கம்பன் கலை நிலை அரக்கர்குலம் அடியோடு அழிவதற்கு வழிகோலிபடியாய் வாய்ந்திருக்கிறது. நிலைமைகளை ஆய்ந்து சிந்தித்து நெஞ்சம் தெளிந்து விரைந்து உய்தியைச் செய்து கொள்ள வேண்டும். மூண்டுள்ள தீமை மூளாமல் அடங்கி கம்குலம் நீண்டு வாழ வேண்டுமாயின் ஈண்டு நான் உறுதியாக ஒன்று சொல்லுகி றேன். முதியவனை எனது வாய்மொழி உனது மதி தெளியச் செய்யும் என்று நம்புகின்றேன்: சீதையை விடுதி ஆயின் திரும் இத்தீமை. மாலியவான் இறுதியில் இவ்வாறு அறுதியிட்டு உறுதி கூறியிருக்கிருன். முதிர்ந்த அனுபவம் வாய்க்க அவனுடைய உரைகள் பரிவுதோய்ந்து பண்பு சுரங்து வந்திருக்கின்றன. 'என்குலம் ஆதியில் இவல்ை இறுதி யுற்றது” என்றது |à: அரக்கர் குலம் முன்னம் அழிந்து பட்டுள்ளதை டுத்துக் காட்டி இப்பொழுதும் அப்படி நேர்ந்துபடாமல் அறி வோடு தப்பி இனிது பிழைக்கும்படி பேரனுக்கு நேரே புத்தி போதித்தவாரும். போகனே வேதனையில் விரிந்து வந்துள்ளது) குலமானமும் குடும்ப பாசமும் கிழவனுடைய நெஞ்சில் பலமாகப் பதிந்திருக்கின்றன. அவ்வுண்மைகளை உரைகள் தோறும் துண்மையாக உணர்ந்து வருகிருேம். சீதையை வெளியே விட்டால் ஒழிய அரக்கர் குலம் பிழை யாது என்று தெளிவாக அவன் முடிவு செய்துள்ளமையால் முடிவில் அதனை முடிவாக வலியுறுத்தினன். காரியத்தைக் கடிது புரியும்படி சீரிய முறையில் கூறியிருப்பது அவனது கூரிய சிங் தனைகளைப் பார மியச் செய்துள்ளது. மூண்டுள்ள அபாயத்தி லிருந்து மீண்டு தப்பிப் பிழைக்கற்கு உரிய உபாயம் சீதையை இராமனிடம் விட்டுவிடுவதே எனச் சிங்கை தெளியவுரைத்தான். விடாதிருந்தால் நீ படாதபாடுகள் படுவாய்! இலங்கையும் பாழாம்; அரக்கர் குலமும் அடியோடு நாசமாம்; ஆதலால் சன்ருக யோசனை செய்து விரைந்து திருந்தி உப்தி பெறுக என உறுதியை உரிமையோடு பரிவுகூர்ந்துபெரியவன்கூறியருளினன். பேரன் பிதற்றியது. தன் பாட்டன் பரிவுடன் கூறிய அறிவுரைகளை யெல்லாம்