பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 $788 கம்பன் கலை நிலை மையால் அந்தக் குறிப்புகளுக்குக் தக்க மறுப்புகளே முறையே

=

இவன் உரைத்தான். உரைகள் உள்ளத் தருக்கோடு எழுந்தன. - பேதைகளான மனிதரும் குரங்குகளும் என்மீது படை எடுத்து வந்துள்ளது எனக்கு நகையினை விளைக்கின்றது. இந்த அற்பப்பிராணிகள் இடக்கட்டும். தேவர் கங்கருவர் அசுரர் முதலிய யாவரும் திரண்டு விண்ணிலும் மண்ணிலும் வேறு எங் கனும் ஒருங்கே மூண்டு போராட நீண்டு நெருங்கினும் நான் ஒருவனே நேரே எதிர்த்து அவரை நீறு செய்து அழிப்பேன். ைேதயின் பொருட்டு நேர்ந்துள்ளதாயின் அப்போரை எவ்வழி யும் பெருமகிமையாகவே நான் பேணிக் கொள்ளுவேன். என் னுடைய சேபைலங்களை நான் எதிர்பார்க்க வில்லை; எனது சொந்த பலத்தையே யாண்டும் நம்பி யிருக்கிறேன். நான் அகிலவுலகங்களையும் வென்றவன்; என்னை வெல்ல எவராலும் முடியாது; தேவர்களே யெல்லாம் வென்று வீறு கொண்டுள்ள எனது பானங்கள் இன்று இங்கே வந்துள்ள இந்த அற்பக் குரங்குகளையும் மனிதரையும் கொன்று ஒழியாவோ? குலபாணி யனை சிவபெருமானே அனுமான் எ ன்னும் பெயரோடு குரங்கு வடிவில் வந்துள்ளதாக உரைக்காப்! அவ்வாறு வந்திருந்தாலும் என்ன? பண்டு ஆலக்கை உண்டது போல் எனது அம்புகளைத் கடுத்துவிடமுடியுமோ? ஆலகா லத்தினும் கொடிய விரப்பகழி கள் என்பால் அளவிடலரிய நிலையில் உள்ளன. பலமுறையும் வந்து போரில் படுதோல்வியடைந்து என் எதிரே பதறி ஒடிப் போன மாயனும் இந்திரனும் மறுபடியும் மனிதர் வானரங்க ளாப் மாறிவந்துள்ளனர் என்று கூறி என்னே நீ பயமுறுத்து வது மதிகேடான மடமையே பாம். முதியவன் ஆகலால் உனக்கு மதிமயக்கம் மிகுந்துள்ளது. எனக்கு நீ புத்திசொன் னது போதும்; எழுந்து போகலாம்” என இவ்வாறு இறுமாப் போடு இராவணன் இகழ்ந்து கூறவே மாலியவான் யாதும் பேசாமலே அழிவுகாலம் மூண்டுள்ளது ஆதலால் அறிவுகேடு நீண்டுள்ளது என உள்ளம் வருக்கி ஒதுங்கிப் போனன். இந்திரனே வென்று வானுலகக்கைக் கைக்கொண்டு மூவுலகங் களையும் ஆண்டுவருகிற வெற்றிவிரன் என்னும் செருக்கு இலங் கைவேந்தன் உள்ளத்தில் வீறு கொண்டிருத்தலால் யாருடைய