பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3594 கம்பன் கலை நிலை காரண காரியங்களைக் குறித்துக் காட்டிப் பலவகையிலும் வாதித்திருப்பது அவனுடைய மனவுறுதியை விளக்கி நிற்கிறது. போர்க்கு உறவு அன்றியே போந்தபோது இவன் ஆர்க்கு உறவு ஆகுவன் அருளின் ஆழியாய்! இராவணன் பகைவரோடு போராட நேர்ந்திருக்கிருன்; அரிய பெரிய போர் மூண்டுள்ளது. இந்தச் சமையத்தில் தமை யனுக்கு உதவியாய் நின்று உபகாரம் செய்யாமல் பேடிபோல் கைவிட்டு விடணன் ஒடி வந்திருக்கிருன். உள்ள காளளவும் நன்ருக உண்டு வாழ்ந்தவன் அல்லல் நேர்ந்தபோது அயலே ஒதுங்கிஞன். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்த கொடிய துரோகியாய் நெடிதோங்கி நிற்கின்ருன். உற்ற உறவினருக்கே உதவி புரியாமல் சதிபுரிந்து வந்து ள்ள இவன் மற்றவருக்கு என்ன உதவி செய்வான்? இவனே எப்படி நம்புவது? நன்றி யில்லாத கொடிய வஞ்சகனை இவனே என்றும் பாதும் நம்பலாகாது எனத் தன் கம்பிக்கையை இங்க னம் நன்கு வலியுறுத்தி உறுதி கூறினன். அருளின் ஆழியாய் என இராமனே இங்கே இப்படி விளிக் திருக்கிருன். கிருபாசமுத்திரம் என அப்பெருமான் பேர் பெற் அறுள்ளதை இப்பொருள் மொழி உணர்த்தி நின்றது. - கருணைக் கடல் ஆதலால் வந்தவனுக்கு இரங்கி இடங் கொடுத்து விடலாகாகே என இந்த விதம் தொடங்கி யுரைத் தான். அரக்கர் பால் இரக்கம் அவலமாம் என்று குறித்தான். பகையினத்தைச் சேர்ந்தவனே உள்ளே புகவிட்டால் தொகையாய் உங்கள் அடியினே அடைந்துள்ள படைகளுக்கு இடையூறு நேர்ந்து விடும்; எல்லை மீறி அருள் புரிவதால் அல்லல் ஏறும் ஆகலால் அவ்வாறு செய்யாமல் தெவ்வோடு திண்மை யாப் எவ்வழியும் செயிர்த்து கின்று திருவருள் புரிக எனப் பொருள் மொழி கூறிப் போற்றி வேண்டினன். கூற்றுவன் தன்னெடு இவ்வுலகம் கூடிவந்து ஏற்றன என்னினும் வெல்ல ஏற்றுளேம். - தம்முடைய ஆற்றலைக் குறித்து இப்படிப் போற்றிப் புகழ்ங் துள்ளான். உலகம் எல்லாம் திரண்டு யமனையும் துணைசேர்க்