பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3798. கம்பன் க்லை நிலை களை நோக்கிச் சிந்தை மகிழ்ந்தான். கரியகோலக்கோடு பெருகி கிற்கின்ற அவற்றின் உருவத் தோற்றங்கள் உவகையை விளைக் தன. ஆயினும் விரைந்து அழிந்து படுதலை கினைந்து மொழிந்தான். ஈவது தெரியா உள்ளத்து இராக்கதர் ஈட்டிவைத்த பாவ பண்டாரம் அன்ன செய்குன்றம் பலவும்பாராய்! உல்லாசமான பொழுது போக்குகளுக்காக இலங்கை யில் இயற்றியிருந்த கரிய செயற்கைக் குன்றுகள் அரக்கர்கள் செய்த பாவ மலைகளைப் போல் மேவிவிளங்கின. பண்டாரம்=பொருள் நிறைந்திருக்கும் பொக்கிசம் வேது தெரியா உள் ள த் து இராக்கதர் என்றது அவரது பாவகிலை கெரிய வந்தது. பிறவுயிர் இரங்கியருளும் தன்மை இல்லாதவர் இர க்கமற்ற கொடிய அரக்கராயப் இழிக்கப்பட்டுள்ளனர். ஈவது கெரிபவர் தேவர்; அது தெரியாதவர் அரக்கர் என்க. -டுகையின் பெருமையும், ஈயாமையின் சிறுமையும் ஈங்கு ருங்கே தெரிய வந்தன) ஈ கலைச் செய்யும் வள்ளல்கள் புகழ் அடைந்து புண்ணிய சீலராப் உயர்ந்து பேரின் பங்களை நுகர் கின்றனர். ஈயாக உலோபிகள் பழிபடிந்து பாவிகளா யிழிந்து கொடிய துன்பங்களை அடைகின்றனர். கரும கருபங்களான இக்குறிப்புகள் ஈண்டு துணுகியுணர வந்தன. ஈவது புரிந்து புண்ணியவானப் உயர்ந்து கொள். ஈயாது இழிந்து பாவியாய் ஒழிந்து போகாதே. என்னும் உணர்வுகலங்கள் இங்கே ஒளிபுரிந்து நிற்கின்றன. கருமமூர்த்தியினுடைய வாய்மொழிகளில் நீதிபோதனைகள் எவ்வழியும் செவ்விய ஒளிகளாப் இனிது வெளிவருகின்றன. வாகை வெஞ்சிலைக்கைவீர வீரக் கார் முகக் களிறே! எனக் கன் தம்பியை இங்கம்பி அன்புரிமையோடு அழைத் திருக்கும் அழைப்பில் விரச்சுவைகள் வீறுகொண்டுள்ளன. 'உன்னுடைய அண்ணியைக் கவர்ந்து கொண்டு போன படுபாககலுடைய ஊர் இப்படிப் புண்ணியபோகங்கள் மலிந்து விண்ணுலகினும் மேலாப் விளங்கியுள்ளது. இதனை விரைந்து அழித்து வெற்றித்திருவை நீ விளைத்தருள வேண்டும் என்னும் ---