பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3804. கம்பன் கலை நிலை யோடு கேட்டான். அதற்கு வீடணன் பதில் உரைத்தான்; அவன் கூறிய மொழிகளை அயலே கானவருகிருேம். காறு தன்குலக் கிளேயெலாம் நரகத்து நடுவான் சேறு செய்துவைத்தான் உம்பர் திலோத்தமை முதலாக் கூறு மங்கையர் குழாத்திடைக் கோபுரக்குன்றத்து ஏறி நின்றவன் புன்தொழில் இராவணன் என்ருன். -இராமனிடம் விபீடணன் இவ்வாறு உரைத்திருக்கிருன். இலங்கைக் கம்பியின் உள்ளக் கொதிப்புகள் உரைகளில் (பொங்கி வந்துள்ளன. பிறவிப்பாசம் அறவே மறந்து பேசி ੋਂ யிருக்கிருன். பேச்சில் பல காட்சிகள் காண வந்தன." தன்குலத்தில் பிறந்தவர் எல்லாரையும் நரகத்தில் குடி யேற்றிவைக்க அடிகோலியிருக்கும் கொடிய தீவினையாளனை இராவணன் அகோ தேவமங்கையர் எவல்புரிய இடையே நிற் கின்றவனே என அண்ணனேச் சுட்டிக்காட்டி இவ்வண்ணம் ; உரைத்துள்ளான் புன்தொழில் இராவணன் என்றது இழிகொழி ல்களில் பழகி இழிந்துள்ள அவனது ஈனநிலை தெரிய வந்தது. பிறருடைய மனைவியரை விரும்புவது பழிபாதகம் ஆன இழி செயல்; அங்கப் புலேக்தொழிலில் கலேமை எய்தியுள்ளமை யால் அவனது நிலைமையை நேரே குறித்து உரைத்தான். : கான் மாத்திரம் அல்லாமல் கன்குலம் எல்லாம் நரகத்தை அடையும்படி கொடிய பாதகத்தைச் செய்துள்ள நெடிய பாவி என்று நெஞ்சம் கொதித்துப் பேசியிருத்தலால் அவன்மேல் இவனுக்குள்ள வெறுப்பு வெளியாய் நின்றது. உடன்பிறந்த அண்ணன் என்பதை அடியோடு மறந்து பேசியுள்ளமையைவாய்மொழியால் உணர்ந்துகொள்ளுகிருேம். நீதி யுடையான் ஆதலால தேடையான வெறுத்துக் குறிக்கான்) os- (ஊர்வசி திலோத்கமை முதலிய பேரழகிகள் சாமரை விசு 'தல் முதலிய பணிகள் புரிய அதிசயமான ஆடம்பரங்களோடு |இராசகம்பீரமாய் விளங்கிக் கோபுரத்தின் சிகரதலத்தில் கின் முன் ஆதலால் உம்பர் மங்கையர் குழாத்திடை கின்றவன் என அவனுடைய இன்ப போகங்களின் இனம் தெரிய வுரைத்தான்.