பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3805 சுக்கிரீவன் பாய்ந்தது. இலங்கை வேங்கனேச் சுட்டிக்காட்டி இன்னவாறு விபீட னைன் சொன்ன போது இராமன் அயலே கின்ற சுக்கிரீவன் உள் ளம் கனன்று உருத்தான். 'ஆ' என் ஆண்டவன் தேவியைக் கவர்ந்து கொண்டு போன பாதகன இவன்!” என்று கோபம் முண்டு குலைதுடிக்கவே தன்னையறியாமலே அவன் மேல் காவிப் ாய்ந்தான். சுவேல மலை மேல் கின்று அந்தக் கோபுரத்தின் உச்சிமேல் இங்கவிரன் விரைந்து பாய்ந்தது அதிசய விசித்திர மாயிருந்தது. இவனுடைய உள்ளக் காய்ச்சலையும் உக்கிரவிர பராக்கிரமத்தையும் அப்பாய்ச்சல் உணர்த்தி நின்றது. அங்கிலே களே அயலே வருகிற கவிப்படங்கள் நன்கு காட்டியுள்ளன. கருதி மற்ருென்று கழறுதல் முனம்விழிக் கனல்கள் பொருது புக்கன முந்துறச் சூரியன் புதல்வன் சுருதி யன்னவன் சிவந்தநற் கனி என்று சொல்லப் பருதி மேல்பண்டு பாய்ந்தவன் ஆமெனப் பாய்ந்தான். (1) கதையத் தோங்கிய சுவேலத்தின் உச்சியைத் துறந்து சிதையத் திண்டிறல் இராவணக் குன்றிடைச் சென்ருன் ததையச் செங்கரம் பரப்பிய தன்பெருந் தாதை உதயக் குன்றினின்று ஒருகுன்றில் பாய்ந்தவன் ஒத்தான். பள்ளம் போய்ப்புகும் புனலெனப் படியிடைப் படிங் அ தள்ளும் பொற்கிரி சலிப்புறக் கோபுரம் சார்ந்தான் வெள்ளம் போற்கண்ணி அழுதலும் இராவணன் தன்மேல் உள்ளம் போற்செலும் கழுகினுக்கு அரசனும் ஒத்தான்.(3) கரிய கொண்டலைக் கருனேயங் கடலினேக் கானப் பெரிய கண்கள்பெற்று உவக்கின்ற அரம்பையர் பிறரும் உரிய குன்றிடை உருமிடி விழ்தலும் உலேவுற்று * இரியல் போகின்ற மயில்பெருங் குலம்என இரிந்தார். (4) (மகுடபங்கப்படலம்,5-6) இங்கே நிகழ்ந்துள்ள நிகழ்ச்சியைவியத்து பார்க்கின்ருேம். கோபவெறியும் விர ஆவேசங்களும் விறுகொண்டு மூண்டுள் «TNT&T-5/Г , கவிகளில் பொதிந்துள்ள காட்சிகள் கருதிக்கானத் தக்கன. உணர்ச்சி வேகங்கள் உச்ச நிலையில் ஓங்கின. இராவணன் என்ற சொல் காதில் பட்டவுடனே சுக்கிரீவ லுடைய உள்ளம் கொதித்தது, சகித்து கிற்க முடியவில்லை;