பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- -- 3596 கம்பன் கலை நிலை கைப்புகுத் துறுசரண் அருளிக் காத்துமேல் பொய்க்கொடு வஞ்சனே புணர்த்த போதினும் மெய்க் கொள விளியினும் விடுதும் என்னினும் திக்குறும் கெடும்பழி அறமும் சிறுமால். மேனனி விளைவது விளம்ப வேண்டுமோ கானகத்து இறைவியோடு உறையும் காலேயில் மான் என வந்தவன் வரவை மானுமிவ் ஏனேயன் வரவும்என் றினேய கூறினன். சாம்பவான் இவ்வாறு கூறியிருக்கிருன். இந்தக் கிழவ னுடைய உரைகளில் உலக அனுபவங்கள் பல மருவி வந்துள் ளன. எவ்வளவு பெரிய அறிவுடையராயினும் பகைவரை நம்

பிச் சேர்த்தால் அவர் அழிவு நேர்வர். நிருதர் பொல்லாத இயல்பினர்; அவர் நல்லவராயிரார். சிலர் நல்லவர்போல் நடித்து முதலில் இனியராப் ஒழுகி வந்தாலும் முடிவில் அல்லலே செப் வர். தீய எண்ணமும் மாய வஞ்சமுமுடைய தீவினையாளரோடு எவ்வழியும் சேரலாகாது. வேதவிதி மறந்து தருமநெறி துறந்து யாண்டும் பாவ காரியங்களையே செய்து வருகிற பாதகர் நம் பால் அன்புடையராப் தன்மை செய்வரா? பழகிய பழக்கத்தின் படியே எவரும் பயின்று வருகின்றனர். எட்டிக்கனி வெளியே அழகாய்த் தோன்றிலுைம் அழிவே செய்யும். கெஞ்சம் தீயவர் நஞ்சு போல் அஞ்சத் தக்கவர். கெட்டவரை நல்லவராக் கருதி உறவு கொள்ளலாகாது. பழகிக் கொண்டபின் இழிவு கெரிந்து அவரை இகழ்ந்து கைவிடின் உலகம் பழிக்கும். பழியான காரி யங்களைத் தெளியாமல் செய்து இள்ளிவுறுவது அழிதுயரமாம். எதையும் நுண்ணிதாக எ ண்ணியறிந்து இனியது செய்வதே தனிமகிமையாம். தியவர் தொடர்பு தீயினும் தீயது. சானகி கேவியோடு கானகத்தில் நீங்கள் வாசம் செய்யும் பொழுது மாயமானப் வங்து மோசம் செய்து போன அந்த நீசன் வரவு போலவே இவன் வரவும் இருக்கும் என்று நான்கினைக்கிறேன்' என இவ்வாறு அம்முதியவன் மொழிந்தான். தீயவர் சேர்க்கை தீயது. அரக்கர் மாய வஞ்சங்களுடையவர், தீய செயலினர், தீய ரான அவரோடு சேரலாகாது; சேர்ந்தால் தீமையுண்டாம் என் லும் வாய்மையை ஈண்டு வலியுறுத்தி வெளிப் படுத்தினன்.