பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3818 கம்பன் கலை நிலை மைல் தடுக்குத்தனமாய்ச் செய்த துட்டச்செயல் இது; இன்று உன்னே இராவணன் கொன்றிருந்தால் என்கதி என்னம்? இதனைச் சிறிது சிக்தனை செய்துபார்! உன்னே இழங்கபின் விர வெறி மண்டி அரக்கர்குலக்கை அடியோடு கருவறுத்து நான் பெரிய வெற்றி பெற்ருலும் அது கொடிய கோல்வியாகுமேயன்றி உரிய வென்றி யாகாதே; ஆண்மை என்பது எது? விரம் ஆவது யாது? எவ்வழி யும் நெறிமுறையுடையனப் யாண்டும் பொறுமையோடு அடங்கி யிருப்பதே பெரிய ஆண்மையாம். உண்மையான விரப்பான் மையை உணர்ந்து கொள்ளாமல் புன்மையா யிழிந்து புலேயாடி நன்மைகள் யாவும் நாசம் செய்ய நேர்ந்தாய்! நீ இறந்து பட்ட பின் அரக்கரை வென்று சீதையை மீட்டிக் கொண்டு திருவ யோக்கிக்குப் போப் நான் சுகமாய் வாழ்வேன் என்று எண்ணி னயோ? அன்னே உன்மதிகேடு என்னே! நீ எதிரி கையில் இன்று இறந்திருந்தால் என்கையில் உள்ள வில்லை ஒல்லையில் வி.இ எறிந்து விட்டு என் உயிரை மாய்த்துவிடுவேன்; நான் மாண் டால் என்தம்பி உடனே மாய்ந்துபடுவான்; எழுபது வெள்ளம் வானரங்களும் ஒருங்கே செத்து ஒழியும்; உலகம் முழுவதும் பெரிய இழவாம். இப்படிக் கொடிய ஒரு பேரிழவு நேரும்படி போரளவு தெரியாமல் புலபுரிந்து போனயே! உன் போக்கை ஒரளவேனும் நீ உணர்ந்து பார்த்தால் உள்ளம் இரங்கி உருகி காணுவாய்! இன்னும் சிறிது நேரம் நீ இங்கு வராமல் இருக்கால் என்ன விளைந்திருக்குமோ? என்று என் நெஞ்சம் அஞ்சுகிறது. பகைவன் மேலுள்ள படு கோபத்தால் மதிமறந்து போய்ப் பிழைபாடு செய்துள்ளாப் விளையாட்டாப் விஜன விஜய நேர்ந் தது; தெய்வம் காக்கருளியது” என இவ்வாறு இவ்விரமூர்த்தி இடித்த அறிவு.அறுத்தவே சுக்கிரீவன் நாணி நொந்து அடியில் விழுங்து நெடிது தொழுதான். பெருமையும் வண்மைதானும் பேரெழில் ஆண்மைதானும் ஒருமையின் உணர நோக்கின் பொறையினது ஊற்றம். - பொறுமையைப் பேணி ஒழுகுவதே பெருமை, அதுவே ஆண்மை; அதுவே வண்மை; எல்லா மேன்மைகளும் அதில்