பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இராமன் 3819 அடங்கியுள்ளன என்று பொறையுடைமையின் மகிமையை இக் குலமகன் இங்கனம் தலைமையாக உணர்த்தி யிருக்கிருன். உள்ளத்தை அடக்கிப் பொறுத்து நிற்பது அரிய செயல். கோபத்துக்கு அடிமையாய்க் கொதித்துப் போவது எளிய நிலை யாம். அந்த எள்ளலில் இழிந்தாய் என இவ்வள்ளல்மொழிந்தான். உள்ளம் கவர்ந்தெழுந்து ஒங்கு சினம்காத்துக் கொள்ளும் குணமே குணம்என்க-வெள்ளம் தடுத்தல் அரிதோ தடங்கரைதான் பேர்த்து விடுத்தல் அரிதோ விளம்பு - (நன்னெறி,8) சினத்தை அடக்கிப் பொறுத்து நிற்பவனே அரிய பெரிய மனிதன்: அதன் வசமாய் இழிந்து போவது சிறுமையே யாம் என இது குறித்துள்ள நிலைமையைக் கூர்ந்து நோக்குக. கரையை உடைத்து வெள்ளம் போய் விடின் நீர் இன்றி வறுமை யடைந்திருக்கும்: பொறையை உடைத்து உள்ளம் போப் விடின் நீர்மை குன்றி நிலைமைகளர்ந்து சிறுமை செறிந்து நிற்கும் என்க. செறிவு நிலை அறிவால் அறிய வுரியது. 55 бро ДГбор II J உயர்த்தி வெள்ளத்தைக் காப்பதுபோல் பொறை யை உயர்த்தி உள்ளத்தைக் காப்பவனிடம் எல்லா மகிமைகளும் வெள்ளம் போல் பெருகி கிற்கின்றன. காதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. (குறள்,180) சினத்தை மடக்கி மனத்தை அடக்கி நிற்பவனைக் கரும தேவதை விரும்பி அடையும் என இது உணர்த்தியிருத்தலால் பொறுமையோடு அடங்கியுள்ளவன் எவ்வளவு பெரிய புண்ணிய சீலன்! என்பதை எளிதே அறிந்து கொள்ளலாம். , - * * கிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி,ஒழுகப் படும். - " (குறள்,154) நிறைந்த மேன்மை தன்னிடம் நிலைத்திருக்க வேண்டின் பொறுமையை அவன் போற்றி ஒழுக வேண்டும் எனத் தேவர் இங்ஙனம் போதித்திருக்கிரு.ர். சிறந்த பெருந்தன்மை நிறைந்த பொறுமையில் உறைந்திருத்தலால் அதனைப் புரந்து வருபவர் ஆன்ருேர் சான்ருேர் என வான்தோய்.புகழோடு விளங்கி கிம்