பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3820 கம்பன் கலை நிலை கின்ருர். சித்தசாந்தியும் தருமமும் அதில் விளைந்து வருகின்றன. உள்ளம் பொறையில் ஒழுகின் உயரின்ப வெள்ளம் பெருகி வரும். இத்தகைய பொறுமையை இழந்து போப்ச் சிறுமையை விளைத்தாயே! என்று இப்பெரியவன் உரியவனே நோக்கி மறுகி யிருக்கிருன். உரைகள் உணர்வொளிகளை விசியுள்ளன. பொறுத்து நிற்பதே ஒருவனுக்கு அழகும் ஆண்மையும் தரும் என்பார் பொறையினது ஊற்றம் பேர்எழில் ஆண்மை என்ருர். ஊற்றம் = உறுதி நிலை. இளேயான் அடக்கம் அடக்கம் கிளேபொருள் இல்லான் கொடையே கொடைப்பயன்---எல்லாம் ஒறுக்கும் மதுகை உரனுடை யாளன் பொறுக்கும் பொறையே பொறை. (நலடியார்,65) உயர்ந்த அடக்கம், சிறந்த கொடை, மேலான பொறுமை களுக்கு இது விளக்கம் குறித்துள்ளது. வெல்ல வல்ல விரன் பொறுத்திருப்பின் பொறுமைகளுள் அது தலைமையானபொறு மையாம்; அப் பொறையைப் போற்றி வருபவன் யாண்டும் நீண்ட புகழுடை பனப்ப் போற்றப் பெறுவான். சிறந்த ஆற்றல் இருந்தாலும் துடுக்காக எதையும் செய்ய லாகாது; நெறியோடு பொறுத்திருக்க வேண்டும் என்று இவ் விர மூர்த்தி போதித்தருளினன், * - இன்னவாறு உணர்வுநலங்களை உரைக்கவே சுக்கிரீவன் மறுகி இராமன் அடியில் விழுந்துகொழுது வணங்கி கின்று நேரே முகத்தைப் பார்க்க நாணிக் கீழே தலைகுனிந்து நிலத்தை நோக்கிப் பேச நேர்ந்தான். தழல் விழிக் கொலே வெஞ்சியம் கிலனுற நோக்கிக் கூறும். சுக்கிரீவன் உருவையும் அவன் கின்று பேசிய நிலையையும் இங்ஙனம் எழுதிக் காட்டியிருக்கிரு.ர். பகைவனைக் கொல்ல மூண்டு பாய்க் து அல்லல்பலபுரிந்து அடலாண்மையோடு மீண்டு வந்துள்ளான் ஆதலால் கொலைவெம்சீயம் என அங்கிலை தெரிய அரைத்தார். விர வெறி விறுகொண்டு மாறி வந்துள்ளது. இராமன் திருமுகத்தைக் காண நாணித் தாையைப் பார் த்துப் பேசியது மனத்திலுள்ள குறையைக் காட்டி கின்றது.