பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 38.21 ஆண்டவனுடைய அனுமதியின்றி அயலே மூண்டு பாய்க்கவன் பகைவனைக் கொன்று விரவெற்றியோடு மீளாமல் வெறுங்கை யணுய் வந்தேனே என்று விெட்கி நொந்துள்ளான். சுக்கிரீவன் உரைத்தது. யாரும் செய்யமுடியாக அரிய காரியக்கை வானரவேங்கன் செய்திருந்தும் யாதும் செய்யாமல் இழிந்து வந்ததாக மனம் உடைந்து மானம் மீதுார்ந்து பேசியிருக்கிருன். வார்த்தைகள் அவனுடைய உள்ளத்தின் வருக்கத்தை வடித்துக் காட்டியுள் ளன. அயலே வருகின்ற பாசுரங்களில் அவன் பேசியுள்ள மொழிகள் ஒசைசெய்து ஒளிர்கின்றன. காட்டிலே கழுகின்வேந்தன் செய்தன காட்ட மாட்டேன்; நாட்டிலே குகனர் செய்த நன்மையை நயக்க மாட்டேன்; கேட்டிலேன் இன்று கண்டும் கிளிமொழி மாதராளே மீட்டிலேன்; தலைகள்பத்தும் கொணர்ந்திலேன்; (வெறுங்கை வந்தேன். (1) வன்பகை கிற்க எங்கள் வானரத் தொழிலுக்கு ஏற்ற புன்பகை காட்டும் யானே புகழ்ப்பகைக்கு ஒருவன்போலாம்; என்பகை தீர்த்துஎன் ஆவி அரசொடும் எனக்குத் தந்த உன்பகை உனக்குத் தந்தேன் உயிர்சுமந்து உழலா கின்றேன். செம்புக்கும் சிவந்த செங்கண் திசைகிலேக் களிற்றின் சிற்றக் கொம்புக்கும்குறைந்ததுண்டேஎன்னுடைக்குரக்குப்புன்தோள் அம்புக்கு முன்னம் சென்றுன் அரும்பகை முடிப்பல் என்று வெம்புற்ற மனமும் யானும் திேன்றி மீள வந்தேன். (3) அால்வலி காட்டும் சிங்தை நும்பெருந் துாதன் வெம்போர் வேல்வலி காட்டி ர்ைக்கும் வில்வலி காட்டி ஞர்க்கும் வால்வலி காட்டிப் போந்த வளாகர் புக்குமற்று என் கால்வலி காட்டிப் போந்தேன் கைவலிக்கு அவதியுண்டோ? (4) சுக்கிரீவன் இவ்வாறு உள்ளம் சொந்து உரையாடியுள் ளான். உரைகளுள் உணர்ச்சி நிலைகள் ஓங்கி கிற்கின்றன. தன் அனுடைய ஆண்டவனுக்குத் தான் யாதொரு உதவியும் செய் யாமல் அவலமாய் வர நேர்ந்ததே! என்று கவலை மீதுார்ந்து பேசி யிருக்கலால் அவனது உள்ளன்பும் உறுதிநிலையும் நன்கு உணர வந்தன. கடமை யுணர்ச்சி உள்ளத்தைக் கவர்ந்து நிற்கிறது.