பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3822. கம்பன் கலை நிலை -* முன்பு உதவி புரிந்த பலரையும் எடுத்துக் காட்டித் தனது நிலையினே இகழ்ந்து நெஞ்சம் நொந்து அஞ்சன வண்ணன் எதி ரே அலமந்து நின்று பலபல புலம்பி அவன் பரிதபித்துள்ளான். சடாயு செய்தது. சடாயுவின் வீரப்பிரதாபத்தையும் பேருதவியையும் சுக்கிரீ வன் இங்கே வியத்து புகழ்ந்திருக்கிருன். சீதையைக் கவர்ந்து கொண்டு இராவணன் இலங்கையை நோக்கி வரும் பொழுது இடையே பாய்ந்து எதிர்த்து அவனைப் பட கபாடுகள் படுத்தி முடிகளைப்பறித்து விசி வில்லை ஒடித்து எறிந்து அல்லல் பல இழைத்து முடிவில் ஒப்த்து விழ்க்கான்; வீழ்ந்தும் பிராட்டியை மீட்ட வில்லையே! என்று பெருந்துயருழந்து இராமன் வரும் வரையும் உயிரைக் காங்கி யிருந்து வந்தபின் நேர்க்க நிலைகளைத் தேர்ந்து கொள்ள வுரைத்து அவ் விரன் மாய்ந்து போனன். முதிய வயதினனை அந்தப் பெரியவன் செய்த பேர்ாண்மைத் திறங்களில் ஒரளவேனும் செய்யாமல் வினே திரும்பி வந்திருக் கிறேன் என நாணி நொந்து பேசினன். கழுகின் வேந்தன்எனச் சடாயுவை விழுமிய அரசமாட்சி யில் இங்க்ே விழைந்து குறிக்கது அவனது விர மேன்மைகளை நினைந்து. அரியன செய்துள்ளமையால் பெரிய மகிமையோடு கூறினன். ஒரு பத்தினியைப் பாதுகாக்கும்பொருட்டுத்தன் உயிரையும் உகுத்து நின்ற உத்தமவிரன் ஆகலால் உலகம் உவந்து துதிக்க உயர்புகழோடு அவன் ஓங்கி யுள்ளான். பெரியவுடையார் என்று திருமால் சமயத்தவர் அவனை உரிமையோடு பாராட்டி வருகி ன்ருர். அந்தக் கழுகின் வேந்தன் இராமனுக்குச் செய்துள்ள அன்புரிமையை எண்ணி வானரவேந்தன் ஈண்டு உருகி யிருக்கி முன். அவன் பாய்ந்து பொருது மாய்ந்து போனது போல் நான் மாண்டு போகாமல் மீண்டு வந்தேனே! என்று மானத்தால் இவ் விரன் மறுகி யுள்ளமையை உரைகள் உணர்த்தி யுள்ளன. குகன் செய்தது. கங்கைக் கரையில் இராமனைக் கண்டபோது குகன் உள்ளம் உருகி உழுவலன்புடையனுப்க் கெழுககைமை கொண்டான். தேனும் பாலும் கொணர்ந்து உண்ணும்படி வேண்டினன். இரவு