பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 38.23 முழுவதும் தன்படைகளோடு பாதுகாத்து நின்ருன். மறுநாள் காலையில் தொணியில் ஏறித் கென்திசை போக எழுக்க பொழுது . இராமன் அடியில் விழுந்து தன்ஊரிலிருந்தே வனவாசகாலத்தைக் கழித்தருளுக எல்லாவசதிகளும் உள்ளன; யாவரும் எவல் செய்து வருவோம்; தேவரீர் ஈண்டே என்பால் இருக்கல் வேண்டும் என்று அன்பால் உருகி ஆவலோடு வேண்டினன். தேனுள தினேயுண்டால் தேவரும் நுகர்தற்காம் ஊனுள துணைநாயேம் உயிருள விளேயாடக் கரனுள புனலாடக் கங்கையும் உளதன்ருே நானுள தனேயும்நீ இனி திரு கட எம்பால். - (1) தோலுள துகில்போலும் சுவையுள தொடர்மஞ்சம் போலுள பறண்வைகும் புரையுள கடிதோடும் கானுள சிலேபூணும் கையுள கலிவானின் ". மேலுள பொருளேனும் விரைவொடு கொணர்வேமால். (2) ஐயிரு பத்தோடு ஐந்தாயிரர் உளரானே செய்குநர் சிலவேடர் தேவரின் வலியாரால் உய்குதும் அடியேம்எம் குடிலிடை ஒருநாள்ே வைகுதி எனின்மேலோர் வாழ்விலே பிறிதென் மூன். (3) இன்னவாறு குகன் முன்னம் வேண்டியிருக்கலால் இராமன் பால் அவன் கொண்டுள்ள அன்புரிமையும் ஆர்வ கிலேயும் அறியலாகும். உள்ளப் பரிவு வெள்ளமாய்ப் பெருகி யுள்ளது. வனவாசம்புரிந்து மீண்டு வருவதாக இக்க ஆண்டகை செல்ல நேர்ந்தபோது அவனும் தொடர்ந்து கூடவந்து ஊழியம் செய்வதாகக் கண்ணிர் கதும்பக் கரைந்து வேண்டினன். அவ அடைய அன்புரிமையை கினைந்து இக்கோமகன் உள்ளம் உருகி உடன் பிறந்த கம்பி என உரிமை பாராட்டி ப் பெருமை கூறி அரிதின் நிறுத்திப் பரிவோடு வங்கான். - 'குகன்ஒடும் ஐவர் ஆகுேம் முன்பு பின் குன்று சூழ்வான் மகன் ஒடும் அறுவர் ஆைேம்’ 3TRT இராமன் திருவாயால் உரிமை பாராட்டிய அந்த அன்புநிலை சுக்கிரீவன் உள்ளத்தை இங்கே உருக்கி யுள்ளது. அந்தக் குகன் எங்கே? நான் எங்கே? ஆண்டவன்பால் அவன் செய்துள்ள பேரன்பும், பேருதவியும் பெருமகிமை புடையன. நான் செய்தது யாதும் இல்லை என உள்ளம் காணியிருக்கிருன்.