பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3825 கனக்கு ஆவியை மீட்டிக் கந்தவனுக்குக் தேவியை மீட்டிக் தந்து செய்கடன் கழிக்க வில்லையே! என்று தேம்பி கொங் துள்ளான். மன வேதனை மான நீர்மையில் மருவி எழுந்தது. உயர்ந்த போர்வீரன்.ஆதலால் உரிய கடமையை நினைந்து உருகி மொழிந்தான். தனக்குப் பேருதவி புரிந்துள்ள பெருங் ககைக்கு ஒரு கவியும் புரியவில்லையே என்று உள்ளம் பரிந்து நொந்துள்ளமையால் அவனுடைய உரிமை நிலையும் உறுதிப்பா டும் கரும விரமும் கருத வந்தன. - உன்பகை உனக்குத் தந்தேன்; உயிர்சுமந்து உழலா கின்றேன். இந்த உரையில் ஊடுருவியுள்ள பரிவுகளைக் கருதிக் கானுங் கள். தனக்கு நேர்ந்திருந்த கொடிய பகையைக் கடிந்து நீக்கி அரச திருவோடு ஆருயிரையும் அருளிய பேருபகாரிக்கு ஒருப காரமும் செய்யமாட்டாமல் வினே உயிர் வைத்திருக்கிறேனே! என்று நாணி வருந்தி நைந்து கொங் திருக்கிருன். - - உரிய கடமையைச் செய்யாமல் உயிர் வாழ்ந்திருப்பது பெரிய அவமானம் என்று மறுகியுள்ளான் உற்றவனுக்கு 3 வாமல் வினே பூமிக்குப் பாரமாயிருக்கிறேனே! எனப் பரிந்து நாணியுள்ளமையால் உயிர் சுமந்து உழலா கின்றேன் என்று து ருழந்து துடித்து சொந்தான்ற புதிய அரச வாழ்வை அடைந்தபின் தனது பிறவிக்குப் பயன் இமாமனுக்கு ஊழியம் புரிவதே என்று உறுதி செய்திருக் தான். தனக்கு ஆவி தந்தவனுக்கு எவ்வழியும் ஏ வல் புரிவதே திவ்விய தருமமாக் கருதியிருந்தவன் ஆதலால் அங்ங்னம் புரிய வில்லையே! என்று மறுகி மயங்கி உருகி யுரையாடி நின்ருன். கால்வலி காட்டி வந்தேன்; o கைவலிக்கு அவதி உண்டோ? -- பெரிய போர் விரன் போல் எதிரிமேல் மூண்டு பாய்க் கேன்; ஒரு காரியமும் செய்யாமல் மீண்டு ஓடி வந்தேன் என இவ்வாறு உளைந்து பேசியுள்ளான். உள்ளப் பரிவும் துயரும் உரைகள் தோறும் வெளி வரலாயின. மானத் துடிப்பு இனத்தை எண்ணி மனத்தைக் கவர்ந்து மறுகச் செய்தது. - 479