பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் - 3827. கால்வலி காட்டி வந்தேன், கை வலிக்கு எல்லை உண்டோ? என்றது அல்ல.அழந்து சொல்லிய படியாம். கையாலாகாத என்னையும் ஒர் உதவியாளகை ஐயனே நீ அஃனத்துக் கொண்டாயே! என்று வெப்துயிர்த்து வெதும்பி புள்ளான். உரைகள் உள்ளப் பரிவுகளை உணர்த்தி நின்றன. இன்னவாறு சுக்கிரீவன் மறுகி யுரையாடியதை அருகே கின்று கேட்டு வந்த விபீடணன் பரிவு கூர்ந்து பேச சேர்ந்தான். இராவணன் மேல் பாய்ந்து போராடித் தகுந்த காரியம் பாதும் செய்யாமல் வெறுங்கையனப் மீண்டு வந்ததாக வானர வேந்தன் நொந்து பேசியதைத் தடுத்து அவன் ஆற்றியுள்ள அருமைப் பாடுகளை வீடணன் எடுத்துக் கூறினன். அவனுடைய வாய்மொழிகள் அரிய பல உறுதி நிலைகளை விளக்கி எழுந்தன. கருதியுணர வுரியன; அயலே வருகின்றன. வீடணன் விளம்பியது.

வாங்கிய மணிகள் அன்ன்ை தலைமிசை மெளலி மேலே ஓங்கிய அல்லவோ மற்றினியப்பால் உயர்ந்த துண்டோ? திங்கவன் சிரத்தின் மேலும் உயிரினும் சீரிது அம்மா! # விங்கிய புகழை எல்லாம் வேரோடும் வாங்கி விட்டாய்! (1) பாரகம் சுமந்த பாம்பின் பணுமணி பறிக்க வேண்டின் வார்கழற் காலி ேைல கல்ல வல்லவனே முன்னத் தார்கெழு மெளலி பத்தின் தனிமனி வலிதில் தந்த - விரதை விடவல் லோற்கும் முடியுமோ? வேறும் உண்டோ (2) கருமணி கண்டத் தான்.தன் சென்னியில் கறைவெண் திங்கள் பருமனி வண்ணன் மார்பில் செம்மணி பறித்திட் டாலும் - தருமணி இமைக்கும் தோளாய்! தசமுகன் முடியில் தைத்த திருமணி பறித்துத் தந்த வென்றியே சீரி தன்ருே? . (3) தொடிமணி இமைக்கும்தோளாய்!சொல்லினும்வேறுமுண்டோ? வடிமணி வயிர ஒள்வாள் சிவன் வயின் வாங்கிக் கொண்டான் முடிமணி பறித்திட்டாயோ இவனினி முடிக்கும் வென்றிக்கு அடிமணி இட்டா யன்றே அரிக்குலத்து அரச! என்ருன். (4) வென்றி என் றென்றுமன்று வீரர்க்கு விளம்பத் தக்க மன்றிஎன் றென்றுமன்று கானிலம் எயிற்றிற் கொண்ட