பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3828. கம்பன் கலை நிலை பன்றியன் ருகின் ஈதார் இயற்றுவார் பரிவின் என்ன இன்றிது வென்றியே என்று இராமனும் இரங்கிச் சொன்னன். (ம்குடப் பங்கப் படலம் 39-48) சுக்கிரீவன் நொந்து பேசிய நிலைகளை எண்ணி விபீடணன் இங்கே உரையாடியுள்ளமையை நாம் ஒர்க் து உணர்ந்து உவகை கூர்ந்து நிற்கிருேம். உரைகளில் உணர்ச்சிகள் பெருகி யுள்ளன. -a - இராவணளுேடு நேரே பாய்ந்து போது ாடிப் பூான வெற்றி பெருமல் மீண்டுவந்தேனே' என்று வானர வேந்தன் கன்னே இகழ்ந்து கூறிய வுரைகளைக் ககைக்கு நீக்கி அவன்அரிய பெரிய வெற்றிபெற்றே வந்துள்ளான் என்று இலங்கைத் கம்பி வியந்து தேற்றி யிருக்கும் வித்தகம் உய்த்துணரத் தக்கது.

இலங்கேசனுடைய பெயரைக் கேட்டால் எமனும் கலங் குவான். தேவர் யாவரும் ஏவல்புரிய மூவுலகங்களையும் ஆண்டு வருகிற ஆண்டகைமையாளன், ஈசன் கைலேயை எளிதில் எடுத்த வன்; அவனுடைய ஆண்ைவழியே யாவும் நடை பெறுகின்றன. பூமியைக் காங்கியுள்ள ஆதி சேடனது முடிபணிகளைக் கன.து காலினலேயே எற்றிக் ககர்க்க வல்லவன். அக்க உக்கிர விரனு டைய கலையில் குடியிருந்த மகுட மணிகளைப் பறித்து வந்தது எவரும் துதி செய்யத் தக்க ஒர் அதிசய வெற்றியேயாம். அங் தத் தலைகளைத் திருகி நேரே கொலே செய்து வந்ததைக் காட்டி அம் கிரீடங்களைக் கவர்ந்து வங்க.து அவ்வ னுக்குக் கொடிய அவமானத்தை விளைத்த படியாம். காலனும் கான அஞ்சுகிற அதிசய விரனேடு நெஞ்சம் துணிந்து நேரே போராடி மீண்டு வந்திருப்பது பாண்டும் யாவரும் வியந்து போற்றவுரிய அற்புக மேயாம். சிவபெருமான் கலையில் குடியுள்ள சந்திரனைப் பறித்து வந்தாலும் வரலாம்; திருமால் மார்பில் அணிந்துள்ள கவுத்துவ மணியை கவர்ந்து கொண்டாலும் கொள்ளலாம்; இராவணனுடைய மகுடமணியைப் பறித்து வருவது அவ்வளவு எளிதன்று, யாராலும் செய்ய முடியாத அதிசயமான காரியத் தை இன்று நீ துணிந்து செய்து வங்துள்ளாப் இகை விட விர மான வேலை யாதும் இல்லை; எவரும் வியந்து கொண்டாடத் தக்க பெரிய வெற்றியைப் பெற்று வந்தும் ஒன்றும் செய்ய வில்லையே! என்று உள்ளம் கொந்து நீ உரைப்பது எனக்கு