பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* *. 3834 கம்பன் கலை நிலை ஒளி குன்றிப் பழி வளர்ந்தது. பிறன் மனையாளை விரும்பின் பகையும் பழியும் பாவமும் தொகையாக வந்து சேரும் என்னும் உண்மையை உலகம் அறிய இவன் வகையாய்க் காட்டி நின்ருன். பழியும் பாவமும் கண்ணுக்குத் தெரியாமல் வளர்ந்திருக் கின்றன. பகை உலகமெல்லாம் தெரியும்படி எழுபது வெள்ளம் சேனைகளோடு நீண்டு வந்து குலக்கை அடியோடு அழிக்க அந்த அழிவு நிலையில் இருக்கின்றவனைக் கவி ஈண்டு விழி தெரிய விளக்கி யிருக்கிரு.ர். கோபுரத்து உச்சிமேல் ஏறி நின்ற அவன் இலச்சையடைந்து கீழே இறங்கிப் போனது மிகவும் ஓங்கி, உயர்ந்திருந்த அவனுடைய புகழ் தேய்ந்து இழிந்து மாய்ந்து போனது போல் இருந்தது. - இந்தக் குறிப்பு எவ்வளவு வியப்புடையது! கூர்ந்து சிங்தித்து ஒர்ந்து உணர வேண்டும். முன்னம் தாதாய் வங்க வானரக்கால் இலங்கை எரிந்து அழிந்தது; இப்பொழுது பாய்ந்து பொருக வானர வேந்தனல் இலங்கை வேந்தன் புகழ் இழிந்து ஒழிக்கது. இவ்வாறு பழியடைந்து போன இராவணன் உளம் மிக வுளைந்து மலரணையில் விழி துயிலாமல் மறுகிக் கிடக்கான். மானத்தால் ஊன்றப் பட்ட மருமத்தான். என்றது அவனுடைய உள்ளத்தில் ஊன்றியுள்ள அல்லல் அவமானங்களின் எல்லை கெரிய வந்தது. குலையில் கூரிய வேல் பாய்ந்தது போல் நிலை களர்ந்து நெஞ்சம் அழிந்துள்ளான். எதிரியின் சேனையைக் காண இராச கம்பீரமாய் வந்தவன் மணி முடியிழந்து பழி துயரங்களோடு மீண்டு வந்து மாண்ட வன் போல் மயங்கி உயங்கி அமளியில் அயர்ந்து கிடந்தது பரிதாபமா யிருந்தது பழி வரவு அழிதுயரமாய் நின்றது. யுத்த ஆயத்தம். சுவேல மலைமேல் ஏறி நின்று இலங்கையைப் பார்த்து விட்டுக் கீழிறங்கி வந்து கழைக் குடிசையில் கங்கியிருந்த இராமன் அன்று இரவே போருக்கு ஆயக்கம் செய்யும்படி