பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இராமன் 3837 தாயினும் பழகினரும் தன்னிலை தெரிக்கலாகா மாயைவல் உருவத்தான். - என அவனுடைய சொரூப விருபங்களைக் கவி நமக்கு இவ் வாறு வரைந்து காட்டியிருக்கிருர். அவன் கண்டு வந்து மன்ன னிடம் கூறிய உரைகளை அயலே காண வருகின்ருேம். விரிய! விதியின் எய்திப் பதினேழு வெள்ளத் தோடும் மாருதி மேலே வாயில் உழிஞைமேல் வருவ தானன்; ஆரியன் அமைந்த வெள்ளம் அத்தனே யோடும் நெற்றிச் சூரியன் மைந்தன் தன்சீனப் பிரியலன் கிற்கச் சொன்னன். (1) அன்றியும் பதினேழ் வெள்ளத் தரியொடும் அரசன் மைந்தன் தென்திசை வாயில் செய்யும் செருவெலாம் செய்வ தானுன்; ஒன்றுபத் தாஅவெள்ளத் தரியொடும் துணேவ ரோடும் கின்றனன் நீலன் என்பான் குனதிசை வாயில் நெற்றி. (2) இம்பரின் இயைந்த காயும் கனியும் கொண்டு இரண்டு வெள்ளம் வெம்புவெஞ் சேனேக் கெல்லாம் உணவுதந் துழல விட்டான்; உம்பியை வாயில் தோறும் கிலேதெரிந்து உணரச் சொன்னுன் தம்பியும் தானும் நிற்ப தாயினுன் சமைவி தென்ருன். (3) - - (அணி வகுப்புப் படலம் 5-7) இலங்கையை இராமன் முற்றுகை செய்து கிற்கும் கிலையை நாம் இதில் உய்த்து நோக்கி உவந்து கிற்கின்ருேம். அரசன் மைந்தன் என்றது வாலியின் மகளுன அங்கதன. திக்கு நிலைகள் கெரிய அரைக்கான். குன திசை= கிழக்கு. தெற்கே அங்கதன், கிழக்கே நீலன், மேற்கே அனுமான், வடக்கே சுக்கிரீவன் கலைமைச் சேனதிபதிகளாய் நிலவி நின்றுள்ளார். நான்கு திக்குகளிலும் தக்க தலைவர்கள் நின்று கொண்டு இலங்கையைச் சுற்றி முற்றுகை செய்து வானரப் படைகளை நிறுத்தியிருக்கின்றனர். போர் முறைகள் சீரிய நிலையில் நிலவின. மாருதி உழிஞைமேல் வருவதான்ை என்றது போர்முறையோடு விர கம்பீரமாய் அனுமான் அன்று நேரே வந்துள்ள நிலைமை தெரிய வந்தது. பகைவனு டைய மதிலை முற்றுகை செய்ய மூண்டு வருபவன் உழிஞை என்னும் பூவைச் குடி வருவன் ஆதலால் விர மாருதி அவ்வாறு செய்து வந்திருக்கிருன். மரபு நிலைகள் மருவி வந்தன. o