பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 10.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3888 * கம்பன் கலை நிலை "முடிமிசை உழிஞை குடி ஒன்னர் கொடி நுடங்கு ஆர்எயில் கொளக் கருதின்று.” உழிஞைத்திணையின் இலக்கணக்கை இது உணர்த்தியுள்ளது. "உழிஞை முடிபுனேந்து ஒன்னுப்போர் மன்னர் விழுமதில் வெல்களிறு பாயக் --- கழிமகிழ்வு எய்தாரும் எய்தி இசைதுவலும் சீர்த்தியனே கொய்தார மார்பின்னம் கோ.” (புறப்பொருள்) ஒன்னர் மதிலைச் சின்னபின்னம் செய்து உள்ளே புகுவதே உழிஞையாம் என்பதை இகளுல் உணர்ந்து கொள்ளலாம். பொரு துறைகளின் முறைகளின் படியே இராமனுடைய போர் வீரர்கள் இலங்கைமேல் நேரே போராட மூண்டுள்ளனர். போர்த்துறை. ஒருவரோடு ஒருவர் இகல் மீக்கொண்டு பகைமை மூண்ட பொழுது போர் மூளுகிறது. அவ்வாறு நேர்ந்து போராடும் செயல் வகைகளுக்குப் பெயர்கள் அமைந்திருக்கின்றன. வெட்சி 1. கரந்தை ■ 2. வஞ்சி 3. காஞ்சி 4. நொச்சி 5. உழிஞை 6. தும்பை 7. (3)IIT II):5 8. இக்க எட்டும் போர் முறைக்கு உரிய திணைகள் ஆம். பகைவர் நாட்டின் பசுக்களைக் கவர்தல்-வெட்சி. அவ்வாறு கவர்ந்து செல்வதை மீட்டிக் கொள்ளுதல்-கரந்தை. போர் மேல் நேரே மூண்டு செல்லல்-வஞ்சி. அங்கனம் வந்தவரை எதிர்ந்து கடுக்கல்-காஞ்சி. தன் மதில் அரணைக் காத்து நிற்றல்-நொச்சி. பகைவன் ஊரை வளைந்து கொள்ளுதல்-உழிஞை.